Automobile Tamilan

டாடா ஹாரியர்.இவி பாரத் NCAP கிராஷ் டெஸ்ட் முடிவுகள்.!

tata harrier ev bncap crash

டாடா மோட்டார்சின் பயணிகள் வாகனங்கள் தொடர்ச்சியாக பாதுகாப்பு சார்ந்த பாரத் NCAP கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று வரும் நிலையில் ஹாரியர்.EV மாடலும் வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் என இரண்டிலும் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது.

சமீபத்தில் விலை அறிவிக்கப்பட்ட ஹாரியர்.இவி ரூ.21.49 லட்சம் முதல் ரூ.27.49 வரை RWD வேரியண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tata Harrier.EV BNCAP crash test

மற்ற வேரியண்டுகள் 6 ஏர்பேக் உடன் மற்ற பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பெற்றிருப்பதுடன் பாரத் கிராஷ் டெஸ்டில் சோதனை செய்யப்பட்டுள்ள Empowered 75 AWD மற்றும் Fearless வேரியண்டுகளுடன் 7 ஏர்பேக்குகளை கொண்டு EBD உடன் கூடிய ABS, டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு (TPMS), ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ-பார்க் அசிஸ்ட், 540-டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் (ADAS) ஆகியவை உள்ளன.

BNCAP-ல் குறிப்பாக வயது வந்தோர் பாதுகாப்பில் 32 புள்ளிகளுக்கு 32 புள்ளிகளும் முழுமையாக பெற்று 5 ஸ்டார் ரேட்டிங், குழந்தைகள் பாதுகாப்பிலும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று (COP) 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளை பெற்றுள்ளன.

ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவருக்கான தலை, கழுத்து, மார்பு, முழங்கால்கள் மற்றும் பாதங்கள் உட்பட அனைத்து பகுதிகளும் நல்ல பாதுகாப்பினை முன்பக்க மோதலில் பெற்றுள்ளது.

தலை, மார்பு, வயிறு மற்றும் இடுப்பு உட்பட அனைத்து பாகங்களும் நல்ல பாதுகாப்பை பக்கவாட்டு மோதலில் பெற்று, பக்கவாட்டு போல் மோதலில் அனைத்து உடல் பாகங்களும் நன்கு பாதுகாக்கின்றன.

குழந்தைகளுக்கான டைனமிக் சோதனையில் ஹாரியர் EV 24க்கு 24 மதிப்பெண்களைப் பெற்றது. 18 மாத குழந்தைகளின் பாதுகாப்பிற்கு, முன்பக்க பாதுகாப்பிற்கு டைனமிக் மதிப்பெண் 8க்கு 8 பெற்றுள்ளது. 3 வயது குழந்தைக்கான பாதுகாப்பிலும் சிறப்பான தரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

Exit mobile version