Automobile Tamil

2 லட்சம் டியாகோ கார்களை விற்ற டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்சின் வளர்ச்சிக்கு வித்திட்ட புதிய டாடா டியாகோ கார், இரண்டு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டியாகோ விற்பனைக்கு வெளியிட்டது.

டாடா மோட்டாரின் இம்பேக்ட் டிசைன் என்ற புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டடியாகோ காரின் மூலம் டாடா நிறுவனம், இந்திய பயணிகள் வாகன சந்தையில் மிகப்பெரிய வெற்றியை டியாகோ பதிவு செய்துள்ளது. மாருதி வேகன் ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ, ரெனோ க்விட் கார்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தியுள்ளது.

70hp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83hp மற்றும் டார்க் 114Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா டியாகோ டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 27.28 கிமீ மற்றும் டியாகோ பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 23.84 கிமீ ஆகும். டாடா டியாகோ கார் விலை ரூ.4.21 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கின்றது.

Exit mobile version