ரூ.13.99 லட்சம் முதல் டாடா நெக்ஸான் இவி மின்சார கார் விற்பனைக்கு வெளியானது

டாடா நெக்ஸான் EV கார் விலை
டாடா நெக்ஸான் EV கார் விலை

டாடா நிறுவனத்தின் முதல் ஜிப்ட்ரான் நுட்பத்தை பெற்ற மின்சார வாகனம் நெக்ஸான் இவி விலை ரூ.13.99 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.15.99 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 312 கிமீ தொலைவு பயணிக்கும் என ஆராய் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட புதிய ஐசி என்ஜின் தோற்றத்திலிருந்து முகப்பு கிரில் உட்பட சிறிய அளவிலான மாற்றங்களை மட்டும் பெற்றுள்ள நெக்ஸான் இவி காரில் மொத்தமாக EV XM, EV XZ மற்றும் EV XZ+ LUX என மூன்று வேரியண்டுகளை கொண்டுள்ளது. இந்த மாடலில் வெள்ளை, நீலம் மற்றும் சில்வர் என மூன்று நிறங்களை கொண்டுள்ளது. இந்த மாடலின்  பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 3 வருடம் அல்லது 1,25,000 வரை நிரந்தர வாரண்டியும் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு 8 ஆண்டு வாரண்டி அல்லது 1,60,000 கிமீ வரை வழங்கப்படுகின்றது.

நெக்ஸான் மின்சார காரில் பொருத்தப்பட்டுள்ள 30.2 KWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 128 ஹெச்பி பவர் மற்றும் 254 Nm டார்க் வெளிப்படுத்தும். 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.5 விநாடிகளும், 0-100 கிமீ வேகத்தை வெறும் 9.9 விநாடிகளில் எட்டிவிடும். முழுமையான சிங்கிள் சார்ஜில் 312 கிமீ ரேஞ்சு தரவல்லதாக ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாடலை அதிகபட்சமாக 80 சதவீத சார்ஜிங் பெற டிசி ஃபாஸ்ட் சார்ஜர் வாயிலாக ஒரு மணி நேரத்திலும், சாதாரன ஏசி சார்ஜரில் 7-8 மணி நேரம் 80 சதவீத சார்ஜ் செய்ய இயலும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக அனைத்து வாகனங்களிலும் இணைப்பு சார்ந்த வசதிகள் அடிப்படையான ஒன்றாக மாறி வரும் நிலையில் இந்த காரிலும் கனெக்ட்டிவிட்டி சார்ந்த தொழில்நுட்பத்துடன் வரவுள்ள ZConnect ஆப் வாயிலாக பல்வேறு விபரங்களை அறிந்து கொள்ளவும் கட்டுப்படுத்தவும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிங்க – நெக்ஸான் EV காரின் சிறப்பு விமர்சனம்

டாடா நெக்ஸான் இவி விலை பட்டியல்

நெக்ஸான் XM : ரூ. 13.99 லட்சம்

நெக்ஸான் XZ+: ரூ. 14.99 லட்சம்

நெக்ஸான் XZ+ LUX: ரூ. 14.99 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் இந்தியா)

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இலவச இல்லத்தில் சார்ஜிங் செய்யும் வகையிலான சார்ஜரை வழங்குவதுடன், 300 டிசி ஃபாஸ்ட் சார்ஜர்களுக்கும் டாடா ஏற்படுத்த உள்ளது. நெக்ஸான் இ.வி காருக்கு மார்ச் 2021-க்குள் 650 விற்பனை நிலையங்களுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களை விரிவுபடுத்தப்பட உள்ளது. கூடுதலாக, டாடா முதல் கட்டமாக ஐந்து முக்கிய இந்திய பெருநகரங்களில் மொபைல் சார்ஜிங் சேவைகளை வழங்கும்.

Exit mobile version