டாடா நெக்ஸான் EV MAX டார்க் எடிசன் விற்பனைக்கு வந்தது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலான டாடா நெக்ஸான் EV MAX காரில் கூடுதல் வசதிகளை பெற்ற கருப்பு நிறத்திலான டார்க் எடிசன் விற்பனைக்கு ₹ 19.04 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்டிரியரில் கருப்பு நிறம் சேர்க்கப்பட்டு, #Dark பேட்ஜ் உடன் கூடி இருக்கை கொண்டுள்ள இந்த காரில் முதன்முறையாக நெக்ஸான் எலக்ட்ரிக் காரில் 10.25 அங்குல டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு ஹர்மானில் இருந்து பெறப்பட்ட உயர்தர எச்டி டிஸ்ப்ளே உடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பினை கொண்டு புதிய UI பெற்றதாக வந்துள்ளது. முன்பாக சஃபாரி மற்றும் ஹாரியர் டார்க் எடிசன் கார்களில் இந்த சிஸ்டம் கொண்டு வரப்பட்டது.

2023 Tata Nexon EV MAX Dark Edition

இவி மேக்ஸ் டார்க் எடிஷன் மாடலில் மிட்நைட் பிளாக் நிறத்தை வழங்கி 16-இன்ச் சார்கோல் கிரே அலாய் வீல், ஸ்டெயின் பிளாக் ஹ்யூமனிட்டி லைன் மற்றும் முன் ஃபெண்டர்களில் ‘#டார்க்’ பேட்ஜிங் கொடுக்கப்பட்டு, புரொஜெக்டர் எல்இடி ஹெட்லேம்ப் உடன் எல்இடி ரன்னிங் விளக்குகளுள், ட்ரை-அரோ எல்இடி டெயில் லைட்டு, ஷார்க்-ஃபின் ஆண்டெனா மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன.

நெக்ஸான் EV மேக்ஸ் காரின் பவர் 141bhp மற்றும் 250Nm டார்க் வழங்குகின்ற மின்சார மோட்டாருக்கு 40.5kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 453 கிமீ பயணிக்கலாம்.

பாதுகாப்பு அம்சங்களில் டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ரோல்-ஓவர் மிட்டிகேஷன், HSA, HDC, ESP, பிரேக் டிஸ்க் வைப்பிங், நான்கு டிஸ்க் பிரேக்குகள், பேனிக் பிரேக் எச்சரிக்கை, இம்பாக்ட் பிரேக்கிங் மற்றும் TPMS ஆகியவை உள்ளன.

நெக்ஸான் டார்க் எடிசன் மாடல் 7.2kW AC வால் பாக்ஸ் சார்ஜருடன் XZ+ LUX விலை ₹ 19.54 லட்சம் மற்றும் XZ+ LUX வேரியண்ட் விலை ₹ 19.04 லட்சம் ஆகும்.  (அனைத்து விலைகள், எக்ஸ்-ஷோரூம்).

Share