டொயோட்டா இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஃபார்ச்சூனர் எஸ்யூவி அடிப்படையில் சிறிய அளவிலான டிசைன் மாற்றங்களுடன் கூடிய லீடர் எடிசனை பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்பொழுது டீலர்கள் மூலம் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் லீடர் எடிசனின் விலை டீலர்களை பொறுத்து மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Toyota Fortuner Leader Edition
ஃபார்ச்சூனர் லீடர் பதிப்பில் கருப்பு கூரையுடன் ஆட்டிட்யூட் பிளாக், பேர்ல் ஒயிட், சில்வர் மெட்டாலிக் மற்றும் சூப்பர் ஒயிட் எ நான்கு வண்ண விருப்பங்களில் வழங்கப்படுகிறது – முன்புறத்தில், மேலே ‘FORTUNER’ எழுத்துக்களுடன் கூடிய புதிய கிரில்லைப் பெறுகிறது. இந்த புதிய கிரிலில் கருமை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு க்ரோம் பூச்சூ கீழே உள்ளது.
18 அங்குல அலாய் வீலை பெற்று ஸ்கிட் பிளேட் மற்றும் இருபக்க பம்பரிலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இன்டீரியரில் கருப்பு மற்றும் மரூன் நிறத்திலான இருக்கைகள், ஒளிரும் வகையிலான ஸ்கஃப் பிளேட்டுடன் தானியங்கி முறையில் மடிக்கும் வெளிப்புற பின்புறக் காட்சி கண்ணாடிகள் (ORVM), மற்றும் டயர்-அழுத்த கண்காணிப்பு அமைப்பு (TPMS) உள்ளது.
4×2 டிரைவ் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 204hp மற்றும் Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இருவிதமாக கிடைக்கின்றது.