Automobile Tamilan

ஹைரைடரில் பண்டிகை கால எடிசனை வெளியிட்ட டொயோட்டா

2024 toyota hyryder festival edition

சமீபத்தில் மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரில் சிறப்பு டாமினியன் எடிசனை விற்பனைக்கு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனமும் சிறப்பு எடிசனை அர்பன் குரூஸர் ஹைரைடர் மாடலில் வெளியிட்டு இருக்கின்றது.

இரு மாடல்களும் ஒரே பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்வதுடன் ஒரே மாதிரியான எஞ்சின் உட்பட அனைத்தும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றது.

Hyryder Festival Limited Edition

அர்பன் குரூஸர் ஹைரைடர் ஃபெஸ்டிவல் எடிசனில் மட் ஃபிலாப் டோர் வைசர், குரோம் கார்னிஷ் ஆனது முன்புற பம்பர் மற்றும் பின்புற பம்பர், ஹெட்லைட் ஃபெண்டர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இன்டீரியரில் 3d ஃப்ளோர் மேட் டேஸ் கேம் மற்றும் லெக் ஏரியாவிற்கு ஒளிரும் விளக்குகள் என மொத்தமாக சுமார் 13 ஆக்செஸரீஸ் கொடுக்கப்பட்டிருக்கின்ற இதனுடைய மதிப்பு ரூபாய் 50,817 ஆகும்.

மிட்-ஸ்பெக் G மற்றும் டாப்-ஸ்பெக் V என இரு டிரிம்களில் கிடைக்கின்ற சிறப்பு எடிசன் பண்டிகை காலத்தில் மட்டும் கிடைக்கும்.

1.5-லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 102 hp மற்றும் 137  டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.  AWD மேனுவல் மாடலில் உள்ளது. இதில் மேனுவல் 21.12kpl மற்றும் ஆட்டோமேட்டிக் 20.58km மற்றும் AWD 19.39kpl கொண்டுள்ளது.

அடுத்து ஹைப்ரிட் என்ஜின் 78 bhp பவர் 141 Nm டார்க் வழங்கும் மின்சார மோட்டாருடன் 91 bhp மற்றும் 122 Nm டார்க் கொண்o 1.5-லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என இரண்டும் இணைந்து செயல்பட்டு அதிகபட்சமாக 115.56 hp பவரை வழங்குகின்றது. இந்த மாடலில் இ-சிவிடி கியர்பாக்ஸ் உள்ளது. ஹைரைடர் ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 27.97kpl ஆகும்.

ஹைரைடர் ஃபெஸ்டிவல் எடிசன் விலை ரூ.14.49 லட்சம்-20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

Exit mobile version