டொயோட்டா ரூமியன் எம்பிவி அறிமுகமானது

toyota rumion

எர்டிகா அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள டொயோட்டா ரூமியன் எம்பிவி விற்பனைக்கு ரூ. லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இருவிதமான ஆப்ஷனில் கிடைக்க உள்ளது.

சமீபத்தில் இன்னோவா அடிப்படையில் மாருதி இன்விக்டோ விற்பனைக்கு வெளியானதை தொடர்ந்து, எர்டிகா அடிப்படையில் ரூமியன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஃபிரான்க்ஸ் அடிப்படையில் அர்பன் க்ரூஸர் டெசெர் வெளியாக உள்ளது.

Toyota Rumion

முகப்பு கிரில் அமைப்பு, புதிய அலாய் வீல், இன்டிரியரில் டேஸ்போர்டு உட்பட பல்வேறு சிறிய அளவிலான மாற்றங்களை பெற்று சுசூகி பேட்ஜ்க்கு பதிலாக டொயோட்டா லோகோ சேர்க்கப்பட்டிருக்கின்றது.

ரூமியன் காரில் G MT, S MT, S AT, S MT CNG மற்றும் V AT என 5 விதமான வேரியண்டுகளை பெற்று டாப் வேரியண்டில் பல்வேறு வசதிகள் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரவுன், வெள்ளை, சில்வர், கிரே மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களை கொண்டுள்ளது.

டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி, ரியர் கேமரா, ரியர் சென்சார் உள்ளிட்ட அம்சங்களுடன் டொயோட்டா i-Connect மூலம் பல்வேறு கனெக்ட்டிவ் வசதிகளும் ரூமியன் காருக்கு 17.78 cm இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.

புதிய ரூமியன் காரில் 1.5 லிட்டர் டூயல் ஜெட் என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் வருவதால், 6000rpm-ல் 103 hp பவரையும், 4400rpm-ல் 136.8 Nm டார்க் வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு கூடுதலாக, பேடல் ஷிஃப்டர்டன் புதிய 6-வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆக மாற்றப்பட்டுள்ளது.

7 இருக்கை பெற்ற ரூமியன் மேனுவல் கியர்பாக்ஸ் மூலம் 20.51kpl மற்றும் ஆட்டோமேட்டிக் 20.11kpl மைலேஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இதே மைலேஜ் ஆனது எர்டிகா காரும் வெளிப்படுத்துகின்றது.

கூடுதலாக சிஎன்ஜி ஆப்ஷன் பெறும் பொழுது CNG இல் இயங்கும் போது 87hp மற்றும் 121.5Nm டார்க் ஆகும். சிஎன்ஜி 5-ஸ்பீடு மேனுவலுடன் மட்டுமே வருகிறது. கிலோவிற்கு 26.11 கிமீ மைலேஜ் என்று கூறப்படுகிறது.

விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் விலை அறிவிக்கப்பட உள்ளது. டொயோட்டா ரூமியன் விலை ரூ.8.70 லட்சம் முதல் துவங்கி ரூ.13.50 லட்சத்துக்குள் நிறைவடையலாம்.