Automobile Tamilan

2024ல் வரவிருக்கும் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார் மற்றும் எஸ்யூவி

upcoming vw and skoda cars 2024

ஃபோக்ஸ்வேகன் குழுமம் இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் என இரு பிராண்டிலும் ஸ்கோடா சூப்பர்ப், கோடியாக், என்யாக் iV எலக்ட்ரிக், டைகன் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ID.4 எலக்ட்ரிக் ஆகிய மாடல்கள் வெளிவரவுள்ளது.

2024 Skoda Superb

இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் மீண்டும் சூப்பர்ப் ஆடம்பர செடான் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் வெளியிடப்பட உள்ளது. 150hp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI, 204hp மற்றும் 265hp என இருவிதமான பவரை வழங்கும் 2.0-லிட்டர் TSI மற்றும் 150hp (2WD) மற்றும் 193hp (4WD) இருவிதமான பவரை வழங்கும் 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் பெறுகின்றது.

கூடுதலாக புதிய 1.5 லிட்டர் பிளக் இன் ஹைபிரிட் ஆகிய ஆப்ஷன் ஆனது அதிகபட்சமாக 204hp பவர் வழங்குவதுடன்  25.7kWh பேட்டரி பேக் சார்ஜ் செய்ய 25 நிமிடங்கள் போதுமான நிலையில் முழுமையான எலக்ட்ரிக் மூலம் 100 கிமீ ரேஞ்சு கிடைக்கும்.

புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் சேஸ் கன்ட்ரோல் டெக், ஆக்டிவ் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ஒன்பது ஏர்பேக்குகள் போன்ற புதிய அம்சங்களுடன் எல்&கே டிரிம் வரக்கூடும்.

2024 Skoda Kodiaq

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி மாடல் 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் மைல்ட்-ஹைப்ரிட் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் டீசல்-தானியங்கி 4×4 அமைப்பின் விருப்பத்தை மட்டுமே பெறுகிறது.

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் இறுதி மாதங்ளில் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Skoda Enyaq iV

ஸ்கோடா நிறுவனத்தின் என்யாக் iV எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் எஸ்யூவி கார் விற்பனைக்கு 2024 ஆம்  ஆண்டின் பண்டிகை காலத்துக்கு முன்பாக ரூ.60 லட்சத்துக்குள் எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச அளவில் 52kWh, 58kWh மற்றும் 77kWh பேட்டரி பேக் பெற்ற ஸ்கோடா என்யாக் iV மாடலில் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார் பெற்ற வேரியண்டில் அதிகபட்சமாக 265hp பவரை வெளிப்படுத்தும் டாப் வேரியண்ட் 510km ரேஞ்ச் வழங்குகின்றது. சமீபத்தில் டாப் 77kwh வேரியண்ட் இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

2024 Volkswagen Taigun Facelift

விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டைகன் எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலண்டில் ரூ.12 லட்சத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

டைகனில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 115PS பவர் 200Nm டார்க் வெளிப்படுத்தும் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. அடுத்தப்படியாக, டாப் வேரியண்டில் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் அதிகபட்சமாக 150PS பவர் 250Nm டார்க் வெளிப்படுத்தும் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக DSG ஆட்டோ கியர்பாக்ஸ் பெற உள்ளது.

Volkswagen ID.4

ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளும் என்யாக் iV மற்றும் ஃபோக்ஸ்வேகன் ID.4 எலக்ட்ரிக் எஸ்யூவி 77kWh பேட்டரி பேக் உடன் இரட்டை மின்சார மோட்டாருடன் 265PS பவர், ஒருமுறை சார்ஜ் செய்தால் 517 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் என WLTP-சான்றளிக்கப்பட்டுள்ளது. ID.4 மாடல் 0-100kmph வேகத்தை 6.9 வினாடிகளில் அடையும் அதே வேளையில் அதன் அதிகபட்ச வேகம் 180kmph ஆகும்

இந்திய சந்தையில் வடிவமைக்கப்பட்டு முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்ற நிலை விலை ரூ.55 லட்சம் முதல் ரூ.60 லட்சத்துக்குள் வரக்கூடும்.

Exit mobile version