Automobile Tamilan

VF7, VF6 மற்றும் VFe34 என மூன்று மின்சார கார்களை வெளியிடும் வின்ஃபாஸ்ட்

 

vinfast vf6 electric carதமிழ்நாட்டில் தயாரிக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் VF7 மற்றும் VF6 என இரண்டு மி்ன்சார கார் மாடல்களும் விற்பனைக்கு அடுத்த மூன்று மாதங்களுக்குள் சந்தைக்கு வெளியிட உள்ளது.

இதுதவிர இந்நிறுவனம் பாரத் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்திய VF e34, VF3, Wild பிக்கப் டிரக் உள்ளிட்ட மாடல்களும் சந்தைக்கு வரவுள்ளது. தூத்துக்குடியில் துவங்கப்பட உள்ள தொழிற்சாலையில், அடுத்த மூன்று மாதங்களுக்குள் கார் உற்பத்தியை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Vinfast VF6

வின்ஃபாஸ்டின் முதல் மாடலாக இந்திய சந்தைக்கு ஜூன் அல்லது ஜூலையில் வெளியிடப்பட உள்ள VF6 எஸ்யூவி காரில் 5 நபர்கள் மிக தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையிலான இருக்கையுடன் 59.6kWh பேட்டரி பொருத்தப்பட்டு ECO, Plus என இரு விதமான வேரியண்டடை பெற்றிருக்கின்ற நிலையில் ஹைவே அசிஸ்ட் என இந்நிறுவனத்தால் அழைக்கப்படுகின்ற Level-2 ADAS உள்ளது.

17 அங்குல வீல் பெற்ற ஈக்கோ வேரியண்ட் 178hp, 250Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 399கிமீ வெளிப்படுத்தும் என WLTP சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

19 அங்குல வீல் பெற்ற பிளஸ் வேரியண்ட் ஆனது 204hp, 310Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் 0-100 % சார்ஜில் 381 கிமீ ரேஞ்ச் கிடைக்கலாம் என WLTP சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Vinfast VF7

ஜூன் அல்லது ஜூலையில் வரவுள்ள VF7 காரில் 75.3kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5 நபர்கள் பயணிக்கும் இருக்கை அமைப்புடன் ஆல் வீல் டிரைவ் பெற்ற பிளஸ் வேரியண்ட் மற்றும் ஈக்கோ வேரியண்ட் உள்ளது.

ஈக்கோ வேரியண்ட் 204hp, 310Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 450கிமீ வெளிப்படுத்தும் என WLTP சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

20 அல்லது 21 அங்குல வீல் பெற்ற பிளஸ் வேரியண்ட் AWD 354hp, 500Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடல் 0-100 % சார்ஜில் 431 கிமீ ரேஞ்ச் கிடைக்கலாம் என WLTP சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Vinfast VF e34

க்ரெட்டா, இ விட்டாரா, பிஇ 6 உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ள உள்ள வின்ஃபாஸ்ட் விஎஃப் இ34 கார் 165 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் பெற்று 41.9Kwh பேட்டரி பேக் பெற்று முழுமையான சிங்கிள் சார்ஜில் 318கிமீ வெளிப்படுத்தும் என NEDC சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாடல் அடுத்த 6 மாதங்களுக்குள் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version