Automobile Tamilan

Upcoming Mahindra SUV’s : விரைவில்., மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட இரண்டு எஸ்யூவிகள் அறிமுகம்

மஹிந்திரா பொலிரோ நியோ

பண்டிகை காலத்தை முன்னிட்டு மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ மற்றும் தார் ஃபேஸ்லிஃப்ட் என இரண்டு எஸ்யூவிகளும் அக்டோபர் முதல் வாரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதால், விரைவில் விற்பனைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, இந்த இரு மாடல்களும் கடந்த பல மாதங்களாகவே சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கூடுதலாக எக்ஸ்யூவி 700 மாடலும் சோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சமாகும்.

Mahindra பொலிரோ நியோ என்ன எதிர்பார்க்கலாம்.,

தற்பொழுது சந்தையில் உள்ள பொலிரோ நியோ மாடல் முன்பாக பலருக்கும் தெரியும் TUV300 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வந்தது என அதனை தற்பொழுது டிசைன் அடிப்படையில் குறிப்பாக சிறிய அளவிலான மாற்றங்கள் ஆனது முன்புற கிரில், பம்பர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு, கூடுதலாக எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் ஹெட்லைட்டில் சிறிய மாற்றங்கள் பெறக்கூடும்.

இன்டீயரில் கூடுதலாக சில நிறங்கள் மற்றும் வசதிகள் என பலவற்றில் மாறுதல்களை கொண்டு இருக்கை அமைப்பில் சிறிய அளவிலான மேம்பாடுகளை பெறக்கூடும்.

மற்றபடி, என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கம் போல 1.5 லிட்டர் டீசல் என்ஜினை பெற்று மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்க உள்ளது.

Mahindra Thar ஃபேஸ்லிஃப்டில் புதிய வசதிகள் வருமா

இது தார் ராக்ஸ் அல்ல மூன்று கதவுகளை பெற்ற தார் எஸ்யூவியின் டிசைனில் சிறிய மாறுதல்களை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த எஸ்யூவி மாடலும் விற்பனைக்கு விரைவில் கிடைக்க உள்ளது.

ராக்ஸின் பல்வேறு இன்டீரியர் அம்சங்களை தார் பெறக்கூடும் என்பதனால் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றதாகவும், பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளுடன், டேஸ்போர்ட் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரியின் நிறங்களில் சிறிய மாறுதல்கள் பெறக்கூடும். வெளிப்புறத்தில் பம்பர், எல்இடி டெயில் லைட் உள்ளிட்ட இடங்களில் மாறுபடுவதுடன் புதிய அலாய் வீல் டாப் வேரியண்டில் பெறக்கூடும்.

அடுத்தப்படியாக, என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல், 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் பெற்ற 152hp 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின், அடுத்து 6 வேக மேனுவலுடன் உள்ள 119hp 1.5 லிட்டர் டர்போ-டீசல், மற்றும் 132hp 2.2 லிட்டர் டர்போ-டீசல் என்ஜினிலும் 6 வேக மேனுவல் மட்டும் வழங்கப்பட உள்ளது.

Exit mobile version