Automobile Tamilan

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் செப்டம்பர் 6ல் அறிமுகம்

vinfast vf7 car

தென்தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தயாரிக்கப்பட்டு வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் VF6 மற்றும் VF7 என இரு கார்களுக்கும் முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட்டு உடனடியாக டெலிவரி வழங்க வாய்ப்புள்ளது.

ஏற்கனவே, தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களால் உற்பத்தி துவக்கி வைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது 13 நகரங்களில் டீலர்கள் துவங்கப்பட்டுள்ளதால் உடனடியாக டெலிவரி வழங்கப்பட உள்ளது.

VF6 காரில் 59.6kWh பேட்டரி பொருத்தப்பட்டு ECO, Plus என இரு விதமான வேரியண்டடை பெற்றிருக்கின்ற நிலையில் 7 ஏர்பேக்குகள், ஹைவே அசிஸ்ட் என இந்நிறுவனத்தால் அழைக்கப்படுகின்ற Level-2 ADAS உள்ளது.

70.8kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5 நபர்கள் பயணிக்கின்ற ஈக்கோ வேரியண்ட் 204hp, 310Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 450கிமீ வெளிப்படுத்தும் என WLTP சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version