Automobile Tamilan

வின்ஃபாஸ்ட் VF6 எலக்ட்ரிக் காரின் சிறப்புகள் மற்றும் ஆன்-ரோடு விலை

vinfast vf6 on-road price

இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் தயாரிக்கப்பட்ட வின்ஃபாஸ்ட் VF6 மிக சவாலான விலையில் துவங்குவதுடன் பல்வேறு நவீன வசதிகள் என பலவற்றில் போட்டியாளர்களான க்ரெட்டா எலக்ட்ரிக், கர்வ் இவி, ZS EV, BE 6 உள்ளிட்ட மின்சார கார்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்துகின்றது.

துவக்க நிலையில் உள்ள வின்ஃபாஸ்ட் மிக குறைந்த டீலர்களின் எண்ணிக்கையில் துவங்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் சர்வீஸ் மற்றும் சார்ஜிங் நிலையங்களை அனுகுவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.

Vinfast VF6 on-road price in Tamil Nadu

59.6Kwh பேட்டரி பேக்கினை பெற்றுள்ள VF6 காரின் தமிழ்நாட்டின் ஆன்-ரோடு விலை ரூ.17.60 லட்சம் முதல் டாப் மாடல் ரூ.19.51 லட்சம் வரை அமைந்துள்ளது.

Variants Price (ex-showroom) on-Road Price
Earth 59.6Kwh Rs 16,49,000 Rs. 17.59,789
Wind 59.6Kwh Rs 17,79,000 Rs. 18,98,870
Wind Infinity 59.6Kwh Rs 18,29,000 Rs. 19,50,898

வின்ஃபாஸ்ட் VF6 வாங்கலாமா ?

இந்தியாவிற்கு வந்துள்ள இந்த புதிய நிறுவனம் வியட்நாமை தலைமையிடமாக கொண்டு மிக சிறப்பான வளர்ச்சியை தனது சொந்த நாட்டில் பதிவு செய்து வருகின்ற நிலையில், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் கிடைக்கின்றது. சர்வதேச அளவில் BYD, டெஸ்லா போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடுக்கின்ற வகையில் தனது நுட்பங்களை மேம்படுத்தி வருகின்றது.

ரேஞ்ச் அளவில் Earth (468 km), Wind (463 km) உறுதிப்படுத்தியுள்ள நிலையில் நிகழ்நேரத்தில் 400 கிமீ வரை கிடைக்கலாம். குறிப்பாக இந்த மாடலுக்கான வாரண்டி சிறப்பாக 10 வருடம் அல்லது 2 லட்சம் கிமீ வழங்கப்படுகின்ற நிலையில் போட்டியாளர்களில் மஹிந்திரா 15 ஆண்டுகள் வாரண்டியை வழங்குகின்றது.

ஓரளவு சிறப்பான ரேஞ்ச், வசதிகள், பாதுகாப்பில் லெவல்-2ADAS என பலவற்றுடன் உள்ளூரில் வடிவமைக்கப்பட்டுவதால் விலை குறைவு ஆகியவை பலமாக அமைந்திருந்தாலும், போதிய டீலர் நெட்வொர்க் இல்லாத காரணம் போட்டியாளர்களுக்கு இணையான கூடுதல் வசதிகள் மற்றும் ரேஞ்ச் தேவைப்படுகின்றது.

இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்ட்டர் அல்லாத வின்ஃபாஸ்ட் மாடலில் பேஸ் வேரியண்டில் ஹெட்ஸ் அப் டிஸ்பிளே கூட இல்லை, மற்ற இரு வேரியண்டுகளிலும் ஹெட்அப் டிஸ்பிளே மட்டும் ஒட்டுநருக்கான தகவல்களை பெற முடிகின்றது. இது பலருக்கு சிரமத்தை தரக்கூடும்.

VF6  பேட்டரி, மோட்டார் மற்றவை

Off, Low, Medium and High என நான்கு விதமான ரீஜெனரேட்டிவ் முறையுடன் ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று ரைடிங் மோடுகளை பெற்றுள்ள நிலையில் ஸ்போர்ட்டிவ் மோடில் மிகச் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்துகின்றது.

59.6 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு Earth 468 km ரேஞ்ச் 177 PS பவர் மற்றும் 250 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், Wind 463 km ரேஞ்சுடன் மாடல் பவர் 204 PS மற்றும் 310 Nm டார்க் வழங்குகின்றது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு சார்ந்தவற்றில் VF6-ல் ஏழு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, 360-டிகிரி கேமரா, குரூஸ் கட்டுப்பாடு, தானியங்கி ஹோல்டுடன் கூடிய மின்னணு பார்க்கிங் பிரேக் பிரேக், டிராக்‌ஷன் கண்ட்ரோல், அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கட்டுப்பாடு, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ரோல்-ஓவர் தடுக்கும் வசதி, டயர் அழுத்தம் கண்காணிப்பு அமைப்பு (TPMS) ஆகியவற்றை அனைத்து வேரியண்டிலும் பெற்றுள்ளது.

VF6 Earth

அனைத்தும் முழுமையான எல்இடி விளக்குகளாக கொடுக்கப்பட்டு 12.9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் தொடுதிரை, எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் ஓட்டுநர் இருக்கை, ஆட்டோமேட்டிக் ஏசி கட்டுப்பாடு, கீ லெஸ் என்ட்ரி மற்றும் கோ, ஆட்டோ-டிம்மிங் IRVM, 6 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், கனெக்டேட் கார் தொழில்நுட்பம் உள்ளது.

VF6 Wind

இரண்டாவது விண்ட் வேரியண்டில் 18-இன்ச் அலாய் வீல், மோச்சா பிரவுன் இன்டீரியர், வீகன் தோல் அப்ஹோல்ஸ்டரி, 8-வழியில் சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், காற்றோட்டமான முன் இருக்கைகள் கேபின் ஏர் ஃபில்டர், அடாப்ட்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், Level-2 ADAS

VF6 Infinity

கூடுதலாக இந்த டாப் வேரியண்டில் கூடுதலாக அகலமான பனரோமிக் சன்ரூஃப் பெற்றுள்ளது.

அறிமுக சலுகையாக 3 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு மற்றும் பனோரமிக் சன்ரூஃப் இலவச கர்டெயின் வழங்கப்படுகின்றது.

Exit mobile version