விஷன் இன் உற்பத்தி நிலை மாடல் பெயரை வெளியிட்ட ஸ்கோடா இந்தியா

28c80 skoda kushaq teaser

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புராஜெக்ட் 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ள நிலையில் முதல் மாடலாக ஸ்கோடா குஷாக் என்ற பெயரில் முன்பாக விஷன் இன் என அறிமுகம் வெளியிடப்பட்ட அடிப்படையிலான கான்செப்ட்டின் எஸ்யூவி மாடலாகும்.

இந்திய சந்தைக்கான MQB A0 IN மாடூலர் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள இந்த எஸ்யூவி காரின் விற்பனைக்கு வெளியிடப்படக்கூடிய மாடலின் பெயரை வெளியிட்டுள்ள நிலையில், விற்பனைக்கு 2021 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகும்.

ஸ்கோடா குஷாக்

ஸ்கோடாவின் அறிக்கையில், நடுத்தர அளவிலான எஸ்யூவியின் பெயர் சமஸ்கிருத வார்த்தையான ‘Kusaq’ என்பதிலிருந்து பெறப்பட்டது, இது ஆங்கிலத்தில் ‘King’ அல்லது “Emperor” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. குஷாக் பெயர் பிராண்டின் எஸ்யூவி பெயரிடலுடன் இந்நிறுவனம் கோடியாக், கரோக், க்ளிக் மற்றும் காமிக் (தொடக்கத்தில் ‘K’ மற்றும் இறுதியில் ‘Q’ உடன்) பொருந்துகிறது.

குஷாக்கில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் (115PS/200Nm) மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் (150PS/250Nm) ஆகியவை இடம்பெறலாம். டீசல் என்ஜின் இடம்பெறுவதற்கு மாற்றாக சிஎன்ஜி என்ஜின் பெறக்கூடும் என எதிர்பார்கப்படுகின்றது. 1.5 லிட்டர் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் பெறலாம்.

போட்டியாளர்கள்

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹாரியர், மஹிந்தரா எக்ஸ்யூவி500, கியா செல்டோஸ், நிஸான் கிக்ஸ் உட்பட வரிவிருக்கும் ஃபோக்ஸ்வேகன் டைகன் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

வரும் மே மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற குஷாக் எஸ்யூவி விலை ரூ.10 லட்சத்தில் துவங்கலாம்.

 

Exit mobile version