மஹிந்திரா நிறுவனத்தின் பாக்ஸி ஸ்டைல் பெற்று 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள பொலிரோ நியோ எஸ்யூவி மாடலின் புதிய அம்சங்கள், ஆன்-ரோடு விலை ரூ.10.24 லட்சம் முதல் துவங்கி ரூ.13.26 லட்சம் வரை அமைந்துள்ள நிலையி்ல் என்ஜின், வேரியண்ட், நிறங்கள் மற்றும் சிறப்புகளை அறியலாம்.
Mahindra Bolero Neo SUV
அர்பன் பயன்பாடுகளுக்கு ஏற்ப வடிவமைப்பினை கொண்ட பொலிரோ நியோவில் மிக தாராளமான இடவசதி பெற்று உள்ள நிலையில், குறைந்த அளவிலான நவீன அம்சங்களை பெற்றதாகவும், பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் பெரிய மேம்பாடினை தற்பொழுது வரை பெறவில்லை.
100hp பவர் மற்றும் 260Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் உள்ள நிலையில் லேடர் ஆன் சேஸிஸை பெற்று சிறப்பான வகையில் கையாளும் திறனுடன் கிடைக்கின்றது.
Mahindra Bolero Neo on-road Price in Tamil Nadu
இந்த புதிய மஹிந்திரா பொலிரோ நியோ எஸ்யூவி ஆன்-ரோடு விலை N4 வேரியண்ட் ரூ.10,23,690 முதல் துவங்கி டாப் N11 வேரியண்ட் ரூ.13,26,070 வரை அமைந்துள்ளது.
Bolero Neo விலை | Ex-showroom | on-road price |
---|---|---|
1.5l Diesel N4 | ₹ 8,49,000 | ₹ 10,23,690 |
1.5l Diesel N8 | ₹ 9,29,000 | ₹ 11,17,918 |
1.5L Diesel N10 (R) | ₹ 9,79,000 | ₹ 11,77,987 |
1.5L Diesel N11 | ₹ 9,99,000 | ₹ 11,98,781 |
1.5L Diesel N10 (O) | ₹ 10,49,000 | ₹ 13,26.070 |
கொடுக்கப்பட்டுள்ள ஆன்ரோடு விலையில், காப்பீடு, ஆர்டிஓ மற்றும் ஆர்டிஓ கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படவில்லை, முழுவிபரங்களுக்கு டீலரை அனுகுங்கள்.
மஹிந்திரா பொலிரோ நியோ என்ஜின், மைலேஜ் விபரம்
வேரியண்ட் மற்றும் வசதிகள்
அடிப்படையில் அனைத்து பொலிரோ நியோ வேரியண்டுகளிலும் 2 ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், முன் மற்றும் இரண்டாவது வரிசைகளுக்கான சீட்பெல்ட் நினைவூட்டல்கள், கதவில் பொருத்தப்பட்டு ஸ்பேர் வீல் கவர், மற்றும் பவர் ஸ்டீயரிங் கொண்டுள்ளது.
N4 Bolero Neo வேரியண்டில்
- 15-இன்ச் ஸ்டீல் வீல்
- ஃப்ரீக்வென்சி சார்ந்த டேம்பிங்
- மோச்சா பிரவுன் அப்ஹோல்ஸ்டரி
- வினைல் சீட் கவர்கள்
- ஆட்டோ எஞ்சின் ஸ்டார்ட்/ஸ்டாப்
- எக்கோ டிரைவ் மோட்
- 12V சார்ஜிங் போர்ட்
N8 Bolero Neo வேரியண்டில்
- வீல்-ஆர்ச் கிளாடிங்
- இரட்டை நிற ORVM
- ரிமோட் கீ என்ட்ரி
- துணி இருக்கைகள்
- ஸ்டியரிங் பொருத்தப்பட்ட ஆடியோ கட்டுப்பாடுகள்
- மியூசிக் பிளேயர் (புளூடூத், USB, AUX)
- மடிக்கக்கூடிய இரண்டாவது வரிசை இருக்கைகள்
N10 Bolero Neo வேரியண்டில்
- ISOFIX குழந்தை இருக்கை நங்கூரங்கள்
- LED பகல்நேர ரன்னிங் விளக்குகள் (DRLகள்)
- கார்னரிங் விளக்குகள்
- மூடுபனி விளக்குகள்
- மின்சாரத்தால் சரிசெய்யக்கூடிய ORVMகள்
- பின்புற கண்ணாடி வைப்பர் மற்றும் டிஃபாகர்
- 15-இன்ச் வெள்ளி அலாய் வீல்
- ரியர் வியூ கேமரா
- உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை
- முன்புற USB டைப்-C சார்ஜிங் போர்ட்
- க்ரூஸ் கட்டுப்பாடு
- 9-இன்ச் தொடுதிரை
- முன் மற்றும் பின்புற ஆர்ம்ரெஸ்ட்கள்
N11 Bolero Neo வேரியண்டில்
- 16-இன்ச் அடர் மெட்டாலிக் சாம்பல் நிற அலாய் வீல்
- லூனார் கிரே லெதரெட் அப்ஹோல்ஸ்டரி
N10 (o) Bolero Neo வேரியண்டில்
மிக சிறப்பான பயண அனுபவத்தை வழங்க லாக்கிங் டிஃபெரன்சியல் கூடுதலாக பெற்றுள்ளது.
Mahindra Bolero Neo Rivals
4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள பிரிவில் நேரடியான போட்டியாளர்கள் பொலிரோ தவிர மற்ற 10 லட்ச ரூபாய்க்கு குறைந்த விலையில் கிடைக்கின்ற காம்பேக்ட் எஸ்யூவிகளை எதிர்கொள்ளுகின்றது.