Automobile Tamilan

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விலை, மைலேஜ் மற்றும் வேரியண்ட் விபரம்

மாருதி சுசூகி ஸ்விஃபட்

இந்தியாவின் முன்னணி மாருதி சுசூகி கார் தயாரிப்பாளரின் பிரசத்தி பெற்ற ஸ்விஃப்ட் மாடலின் ஆன்ரோடு விலை ரூ. 7.05 லட்சம் முதல் ரூ.10.60 லட்சத்தில் கிடைக்கும் நிலையில் நிறங்கள், மைலேஜ்,  மற்றும் வேரியண்ட், வசதிகள் மற்றும்  என அனைத்து அறிந்து கொள்ளலாம்.

Maruti Suzuki Swift on road Price in Tamil Nadu

மாருதி சுசூகியின் ஸ்விஃப்ட் காரின் மேனுவல் ரூ.7.05 லட்சம் முதல் ரூ. 10.10 லட்சம் வரையும், சிஎன்ஜி வேரியண்டுகள் ரூ.9.01 முதல் ரூ.10.12 லட்சம் வரையும் ஏஎம்டி பெற்ற மாடல் ரூ.8.52 லட்சம் முதல் ரூ.10.60 லட்சம் வரை அமைந்துள்ளது.

Maruti Swift EX-showroom Price On-Road Price
Maruti Swift LXi 1.2l ISS 5 MT ₹ 5,78,900 ₹ 7,04,698
Maruti Swift VXi 1.2l ISS 5 MT ₹ 6,58,900 ₹ 7,93,780
Maruti Swift VXi (O) 1.2l ISS 5 MT ₹ 6,84,900 ₹ 8,31,097
Maruti Swift ZXi 1.2l ISS 5 MT ₹ 7,52,900 ₹ 9,11,876
Maruti Swift ZXi+ 1.2l ISS 5 MT ₹ 8,19,900 ₹ 9,91,657
Maruti Swift ZXi+ 1.2l ISS 5 MT DT ₹ 8,34,900 ₹ 10,09,876
CNG    
Maruti Swift VXi  cng ₹ 7,44,900 ₹ 9,01,097
Maruti Swift VXi (O)  cng ₹ 7,70,900 ₹ 9,32,654
Maruti Swift ZXi MT cng ₹ 8,38,900 ₹ 10,11,672
AMT Gearbox    
Maruti Swift VXi 1.2l ISS AGS ₹ 7,03,900 ₹ 8,51,761
Maruti Swift VXi (O) 1.2l ISS AGS ₹ 7,29,900 ₹ 8,84,430
Maruti Swift ZXi 1.2l ISS AGS ₹ 7,97,900 ₹ 9,63,569
Maruti Swift ZXi+ 1.2l ISS AGS ₹ 8,64,900 ₹ 10,42,679
Maruti Swift ZXi+ 1.2l ISS AGS DT ₹ 8,79,900 ₹ 10,59,981

GST 2.0 updated – கொடுக்கப்பட்டுள்ள ஆன்ரோடு விலையில், காப்பீடு, ஆர்டிஓ மற்றும் ஆர்டிஓ கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்படவில்லை, முழுவிபரங்களுக்கு டீலரை அனுகுங்கள்.

ஸ்விஃப்ட் டிசைன்

அடிப்படையான டிசைனை தக்கவைத்துக் கொண்டாலும் மிக சிறப்பான நான்காம் தலைமுறை சுசூகி ஸ்விஃப்ட் பல்வேறு மாறுதல்களை எல்இடி ஹெட்லைட் உடன் மிக நேர்த்தியான ரன்னிங் விளக்குடன் கொடுத்துள்ளது.
‘Heartect’ பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள காரில் 6 ஏர்பேக்குகள் கொண்டு உறுதியான கட்டுமானத்துடன் C வடிவ எல்இடி டெயில் விளக்குகள், 15 அங்குல அலாய் வீல் டாப் வேரியண்டுகளில் இடம்பெற்றுள்ளது.  ஆரஞ்சு, நீலம், சிவப்பு, சில்வர், கிரே, வெள்ளை என 6 ஒற்றை வண்ண நிறங்கள், கூடுதலாக கருப்பு நிற மேற்கூறையுடன் வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய மூன்று டூயல் டோன் என மொத்தமாக 9 நிறங்களை பெற்றுள்ளது.
புதிய  மாருதியின் ஸ்விஃப்ட் 3,860 மிமீ நீளம், 1,735 மிமீ அகலம், 1,520 மிமீ உயரம் மற்றும் 2,450 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது.

  2025 Swift
நீளம் 3860 mm
அகலம் 1735
உயரம் 1520mm
வீல்பேஸ் 2450 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 163 mm
பூட்ஸ்பேஸ் 265 l
இருக்கை அளவு 5
எரிபொருள் டேங்க் 37 L
டர்னிங் ரேடியஸ் 4.8M
கெர்ப் எடை 925KG
GVW 1355 KG
பிரேக் டிஸ்க் FR
டிரம் RR
சஸ்பென்ஷன் Macpherson strut FR,
Torsion beam RR
டயர் அளவு 185/65-R15
165/80-R14

ஸ்விஃப்ட் இன்டிரியர்

5 நபர்கள் அமரும் வகையில் இடவசதியை பெற்றுள்ள மாருதியின் ஸ்விஃப்ட் காரில் மிக நேர்த்தியாக புதுப்பிக்கப்பட்ட இன்டிரியரில் டாப் வேரியண்டுகளில் கலர் MID (multi-information display) கிளஸ்ட்டருடன் 9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்றுள்ளது. குறைந்த விலை வேரியண்டுகளில் 7 அங்குல சிஸ்டம் மற்றும் துவக்க நிலையில் LXi மாடலில் சிறிய சிஸ்டத்தையும் பெற்றுள்ளது.
சுசூகி கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் பேட்,  க்ரூஸ் கண்ட்ரோல், ஹெட்அப் டிஸ்பிளே மூலம் வேகம் , டர்ன் பை டர்ன் நேவிகேஷனை பெறுகின்றது.
பின்புற இருக்கைகளுக்கு ஏசி வென்ட், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் உடன் 265 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ள பூட் ஸ்பேஸ் பெற்றுள்ள மாடலில் பின்புற இருக்கைகளை 60:40 என மடக்கும் வசதியும் இடம்பெற்றுள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் என்ஜின்

மூன்று சிலிண்டர் என்ஜின் என்றாலும் மிக குறைவான அதிர்வுகளை வழங்கும் வகையில் மேம்பட்ட முறையில் ரீஃபைன்மென்ட் செய்யப்பட்டுள்ளது. ஸ்விஃப்டில் உள்ள 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பவர் அதிகபட்சமாக 81.6 PS மற்றும் 112 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் 5 வேக  மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

  Swift
Engine 1,197cc, 3சிலிண்டர் Z12E என்ஜின்
பவர் 82 PS at 6000rpm
டார்க் 112 Nm at 4300rpm
கியர்பாக்ஸ் 5 MT/ 5AMT
மைலேஜ் 5MT 24.80 KMPL
மைலேஜ் 5 AMT 25.75 KMPL

ஸ்விஃப்ட் பாதுகாப்பு அம்சங்கள்

நான்காம் தலைமுறை மாருதி சுசூகி ஸ்விஃப்ட் பாதுகாப்பில் Bharat NCAP விதிமுறைக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதனால் சிறப்பான தரத்தை கொண்டிருக்கும். மேலும், ஆறு ஏர்பேக்குகள், அனைத்து பயணிகளுக்கும் மூன்று-புள்ளி இருக்கை பெல்ட், சீட் பெல்ட் ரிமைன்டர், ESP, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ABS உடன் EBD ஆகிய வசதிகளை கொண்டிருக்கின்றது.

ஸ்விஃப்ட் வேரியண்ட்

2026 மாருதி ஸ்விஃப்ட் காரில் LXi, VXi, VXi (O), ZXi, மற்றும் ZXi+ என 5 விதமான வேரியண்ட்டை பெற்று 11 விதமான வகைகளில் கிடைக்கின்றது.

  • ஹாலோஜன் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்
  • LED டெயில் விளக்குகள்
  • 14 அங்குல ஸ்டீல் வீல்
  • கிரில், விங் மிரர் மற்றும் கதவு கைப்பிடிகளில் கருமை நிறம்
  • பாடி கலர் பம்பர்கள்
  • பவர் விண்டோஸ்
  • மேனுவல் அட்ஜெஸ்ட் மிரர்
  • டில்ட் ஸ்டீயரிங் அட்ஜெஸ்ட்

LXi 5MT வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,

  • 14 அங்குல ஸ்டீல் வீல்க்கு வீல் கவர்
  •  கிரில், விங் மிரர் மற்றும் கதவு கைப்பிடிகளில் பாடி நிறம்
  • ரியர் பார்ஷல் டிரே
  • 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  •  SmartPlay Pro கனெக்ட்டிவிட்டி வசதி
  • ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே
  • OTA மேம்பாடு
  • ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கட்டுப்பாடு சுவிட்சுகள்
  • 4 ஸ்பீக்கர்கள், 2 ட்விட்டர்கள்
  • Type-A சார்ஜிங் போர்ட்

VXi வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,

  • பவர் ஃபோல்டிங் விங் மிரர்
  • ஸ்மார்ட் கீ
  • எஞ்சின் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்
  • சுசூகி கனெக்ட் வசதிகள்

VXi (O) வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,

  • LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்
  • LED DRL
  • 15 அங்குல அலாய் வீல்
  • லக்கேஜ் பகுதிக்கு விளக்கு
  • உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை
  • வயர்லெஸ் சார்ஜர்
  • ஆட்டோமேட்டிக் ஏசி
  • பின்புற ஏசி வென்ட்
  • வாஷருடன் பின்புற வைப்பர்
  • ஃபாலோ-மீ-ஹோம் வசதி பெற்ற ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்
  • 60:40 ஸ்பிளிட் இருக்கை
  • யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்

ZXi வேரியண்டில் உள்ள வசதிகளுடன் கூடுதலாக அல்லது மாற்றாக,

  • 15 அங்குல மெசின் கட் அலாய் வீல்
  • முன் LED மூடுபனி விளக்குகள்
  • லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங்
  • முன்பக்க பேடெல் விளக்கு
  • பின்புற பார்க்கிங் கேமரா
  • 9-இன்ச் SmartPlay Pro+ தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
  • Arkamys ஆடியோ சிஸ்டம்
  • க்ரூஸ் கண்ட்ரோல்

ஸ்விஃப்ட் நிறங்கள்

புதிய ஸ்விஃப்ட் காரின் நிறங்கள் படங்களில் உள்ளது

Exit mobile version