Automobile Tamilan

Auto Expo 2020: 400 கிமீ ரேஞ்சு.., எம்ஜி மார்வெல் எக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியானது

mg marvel x

Auto Expo 2020: சீனாவின் எம்ஜி மோட்டார் நிறுவனம் சிங்கிள் சார்ஜில் 400 கிமீ பயணிக்கும் திறன் பெற்ற எம்ஜி மார்வெல் எக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த மாடல் 2017 ஷாங்காய் ஆட்டோ கண்காட்சியின் போது வெளியான விஷன் இ கான்செப்டின் தயாரிப்பு நிலை மாடலே மார்வெல் எக்ஸ் ஆகும். மிக நேர்த்தியான முன்புற கிரில் அமைப்பினை பெற்று எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், ஸ்போர்ட்டிவான அலாய் வீல் பெற்றுள்ளது.  இது இரண்டு விதமான வேரியண்டில்  வந்துள்ளது. ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ், இவை இரண்டுமே 52.5 கிலோ வாட் பேட்டரி பேக் மற்றும் இரண்டு மோட்டார்களை பெற்றுள்ளது.

மார்வெல் எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி இரண்டு மின்சார மோட்டார்கள் மூலம் இயக்கப்படுகிறது. இதில் உள்ள மோட்டார் 114 பிஹெச்பி மற்றும் 70 பிஹெச்பி கொண்டதாகும். மேலும் ஒரு மோட்டார் முன் வீல் பொருத்தப்பட்டிருக்கும், பின்புற வீலுக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஸ்யூவி முழுமையான சிங்கிள் சார்ஜில் 400 கி.மீ தூரத்தை வழங்குகிறது, மேலும் பேட்டரி பேக் ஏசி சார்ஜரைப் பயன்படுத்தி முழுமையாக சார்ஜ் செய்ய 8.5 மணிநேரமும், டிசி சார்ஜரைப் பயன்படுத்தி 40 நிமிடங்களில் 80 சதவீதமும் பெற இயலும்.

Exit mobile version