Automobile Tamilan

ஜேபிஎம் சோலாரீஸ் ஈக்கோ-லைஃப் மின்சார பேருந்து அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018

இந்தியாவின் ஜேபிஎம் ஆட்டோ மற்றும் ஐரோப்பியாவின் முன்னணி பஸ் மற்றும் கோச் நிறுவனமாக விளங்கும் சோலாரீஸ் பஸ் & கோச் SA இணைந்து இந்தியாவில் ரூ. 2 கோடி மதிப்பில் ஜேபிஎம் சோலாரீஸ் ஈக்கோ-லைஃப் மின்சார பேருந்தை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.

ஜேபிஎம் சோலாரீஸ் ஈக்கோ-லைஃப்

இந்தியாவில் ரூ. 2 கோடி விலையில் விற்பனை செய்யப்பட உள்ள முழுமையான மின்சாரத்தில் இயங்கும் சோலாரீஸ் ஈக்கோ-லைஃப் பேருந்து சுற்றுசுழல் மாசுபாட்டை 959 டன் கார்பன் டை ஆக்ஸைடு அளவிற்கு குறைக்க, 350,000 லிட்டர் டீசல் ஆகியவற்றை 10 ஆண்டுகால பயன்பாட்டில் மிச்சப்படுத்துவதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முதற்கட்டமாக உத்தர பிரதேச மாநில அரசு இந்நிறுவனத்துடன் இணைந்து 10 பேருந்துகளை டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் இயக்குவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

இக்கோ-லைஃப் பேருந்து ஒரு சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 150-200 கிமீ தொலைவு பயணிக்கும் திறன் கொண்ட பேட்டரியுடன், 10-15 மணி நேர வரை பேருந்தை நகர்ப்புற  பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் விளங்கும் என சோலாரீஸ் குறிப்பிட்டுள்ளது.

9 மீட்டர் நீளம் கொண்டுள்ள ஈக்கோ-லைஃப் பேருந்தில், ஜிபிஎஸ், பயணிகள் தகவல் அமைப்பு, வாகனத்தின் ஹெல்த் மானிட்டெரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் சிஸ்டம், வீல்சேர் ரேம்ப் உட்பட பல்வேறு வசதிகளை கொண்டதாக வந்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள இக்கோ-லைஃப் பேருந்துகள் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள ஃபாரிதாபாத் மற்றும் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கொசி ஆகிய இரு தொழிற்கூடங்களில் ஆண்டுக்கு 2000 பேருந்துகளை தயாரிக்க இயலும் என ஜேபிஎம் சோலாரீஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version