Automobile Tamilan

ஆட்டோ எக்ஸ்போ 2018 : விரைவில் ஹீரோ XF3R பைக் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவின் முதன்மையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளராக விளங்கும் ஹீரோமோட்டோகார்ப் விரைவில் 200 சிசி மாடல் ஒன்றை விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் 300சிசி மோட்டார் சைக்கிள் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஹீரோ XF3R பைக்

கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனம் காட்சிக்கு கொண்டு வந்த ஹீரோ HX250 R மாடலை உற்பத்தி செய்யும் எண்ணத்தை கைவிட்டிருந்த நிலையில், 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்த ஹீரோ எக்ஸ்எஃப்3ஆர் எனப்படும் பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள் மாடலை உற்பத்திக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஆட்டோகார் தகவல் வெளியிட்டுள்ளது.

ஹீரோ நிறுவனம் , ஜனவரி 31, 2018-யில் புதிய 200சிசி திறன் கொண்ட எக்ஸ்ட்ரீம் நெக்ஸ்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் 300சிசி எஞ்சினுடன் கூடிய அதிக திறன் பெற்ற ஸ்போர்ட்டிவ் ரக மோட்டார்சைக்கிள் மாடல் ஒன்றை ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் உற்பத்தி நிலை மாடலாக காட்சிப்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது.

மிக வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர ரக பிரிவு 200சிசி -650சிசி வரையிலான சந்தையில் ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் நெக்ஸ்ட், ஹீரோ XF3R பைக் மற்றும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் என மொத்தம் மூன்று மாடல்களை அடுத்த 6 முதல் 12மாதங்களுக்குள் சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.

வருகின்ற ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ மோட்டோகார்ப் 125சிசி ஸ்கூட்டர், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 , உற்பத்தி நிலை ஹீரோ XF3R 300சிசி பைக் உட்பட மேலும் புதிய கான்செப்ட்களை காட்சிப்படுத்த தயாராகி வருகின்றது.

Exit mobile version