Automobile Tamilan

ஸ்கோடா கோடியக் எஸ்யூவி செப்.1 அறிமுகம்

வருகின்ற செப்டம்பர் 1ந் தேதி ஸ்கோடா கோடியக் எஸ்யூவி கார் உலகிற்கு பெர்லினில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பாரீஸ் மோட்டார் ஷோவில் கோடியக் எஸ்யூவி காட்சிக்கு வரவுள்ளது.

Skoda-Kodiaq-teaser-launch

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக செயல்படும் செக் குடியரசு நாட்டின் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியக் எஸ்யூவி கார் எட்டி காருக்கு மேலாக நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்திய சந்தையில் 2017 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபோக்ஸ்வேகன் MQB பிளாட்பாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள கோடியக் எஸ்யூவி கார் ஸ்கோடா விஷன் எஸ் கான்செப்ட் மாடலின் டிசைன் தாத்பரியங்களை கொண்ட பிரிமியம் ரக எஸ்யூவி காராக 5 மற்றும் 7 இருக்கை ஆப்ஷனில் கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 3 TSI பெட்ரோல் இஞ்ஜின்கள் மற்றும் இரண்டு TDI டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் 6 வேக மெனுவல் மற்றும் 7 வேக DSG ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்று முன்பக்க வீல் டிரைவ் மற்றும் ஆல்வீல் டிரைவ் வசதியை பெற்றிருக்கும். ஸ்கோடா சூப்பர்ப் காரில் உள்ள பெரும்பாலான சிறப்பம்சங்களை பெற்றதாகவும் கூடுதலான வசதிகளுடனும் விளங்கும்.

2017 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் பல்வேறு ஐரோப்பியா நாடுகளில் விற்பனைக்கு செல்ல உள்ள கோடியக் இந்தியாவில் அடுத்த வருடத்தின் மத்தியில் சந்தைக்கு வரவுள்ளது. சான்டா ஃபீ , ரெக்ஸ்டான் , ஃபார்ச்சூனர் , எண்டேவர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

Exit mobile version