Automobile Tamilan

GST பைக் விலை : ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலை குறையும்..!

ஜூலை 1-ந் தேதி முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை அமலுக்கு வருவதனை தொடர்ந்து ராயல் எனஃபீல்டு பைக்குகள் விலை குறையும், ஆனால் சில மாடல்கள் விலை உயர்வினை சந்திக்க உள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகள் – ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி வருகையால் 350சிசி திறனுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 28 சதவிகித அடிப்படை வரியிலிருந்து கூடுதலாக மூன்று  சதவிகிதம் விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளதால் 350சிசி திறனுக்கு கூடுதலான பைக்குகளுக்கு 31 %  வரி என அறிவிக்கப்பட்டுள்ளதால் ராயல் என்ஃபீல்டு பைக்குகள் ஜூலை 1 முதல் விலை உயரக்கூடும்.

குறிப்பாக கவனியுங்கள் அரசு அறிவித்துள்ளபடி 350சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விலை உயரும் ஆனால் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் கிளாசிக் 350, புல்லட் 350, தன்டர்பேர்டு 350, புல்லட் ES போன்ற மாடல்களின் விலை குறையும் எவ்வாறு தெரியுமா ? இந்த மாடல்களில் உள்ள எஞ்சின் 346சிசி திறன் கொண்டது மட்டுமே ஆகும். எனவே இந்த மோட்டார்சைக்கிள்கள் விலை ரூ. 3000 வரை குறையலாம்.

ஆனால் மற்ற புல்லட்களான கிளாசிக் 500, தன்டர்பேர்டு 500 , கிளாசிக் க்ரோம் மற்றும் ஹிமாலயன் போன்றவற்றின் விலை ரூ. 1500 முதல் ரூ.2,000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

GST பைக்

ஜிஎஸ்டி வரி என்றால் என்ன ? அதாவது நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக நாட்டில் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு வரி வசூலிக்கப்படும்.

ஜிஎஸ்டி தொடர்பான  கூட்டத்தில் 1,211 பொருட்களுக்கு விதிக்கப்பட உள்ள வரி விகிதம் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. 5,% 12%, 18%, மற்றும் 28% என்ற சதவிகித அடிப்படையிலேயே நான்கு விதமான வரிகள் விதிக்கப்பட உள்ளன.

ஆட்டோமொபைல் துறை சார்ந்த வாகனங்கள், மோட்டார் சைக்கிள் , தனிநபர் பயன்பாட்டிற்கான ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மற்றும்  சொகுசு படகுகள் போன்றவற்றுக்கு 28 சதவிகித வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டை சார்ந்த டிராக்டர்களுக்கு 12 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version