Automobile Tamilan

ஜாவா 350 OHC பைக் விற்பனைக்கு வெளியானது

மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற கிளாசிக் மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதாக ஜாவா 660 வின்டேஜ் மற்றும் ஜாவா 350 OHC என இரு மாடல்களை செக் குடியரசில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஜாவா 350 OHC

கடந்த ஆண்டு மஹிந்திரா நிறுவனம் ஜாவா மற்றும் பிஎஸ்ஏ மோட்டார் சைக்கிள் நிறுவனங்களை கையகப்படுத்தியை தொடர்ந்து முதன்முறையாக ஜாவா மாடலில் இரு பைக்குகளை விற்பனைக்கு செக் குடியரசில் வெளியிட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்ட  பழைய 350 Type 634 இரு ஸ்டோரக் எஞ்சினை அடிப்பையாக கொண்டு ஜாவா 350 OHC பைக்கின் தோற்ற அமைப்பு வடிவமைக்கப்பட்டு சீன நிறுவனத்தின் 397சிசி எஞ்சினுடன் டெல்பீ நிறுவனத்தின் எஃப்ஐ பெற்று யூரோ 4 விதிமுறைக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

350 ஓஹெச்சி பைக்கில் உள்ள 397சிசி எஞ்சின் அதிகபட்சமாக 6,500rpm சுழற்சியில் 27.7 hp பவருடன் 30.6Nm டார்க்கை 5,000rpm சுழற்சியில் வெளிப்படுத்துகின்றது. முன்புறத்தில் 19 இஞ்ச் வீல் மற்றும் பின்புறத்தில் 18 இஞ்ச் வீல் பெற்று முன்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கை பெற்றுள்ளது.

இந்த பைக் செக் குடியரசு நாட்டின் மதிப்பில்  CZK 99,930 (Rs 2.6 lakh) ஆகும்.

மேலும் படிக்க -> ஜாவா 660 வின்டேஜ் என்ற பைக் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜாவா பைக்குகளை மஹிந்திரா நிறுவனம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற உள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளது.

ஜாவா 350 ஓஹெச்சி பைக் படங்கள்

 

Exit mobile version