Automobile Tamilan

ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக் முன்பதிவு தொடங்கியது

இந்தியாவின் 150-160சிசி வரையிலான சந்தையில் சிறப்பான பங்களிப்பினை வெளிப்படுத்தும் நோக்கில் ரூ.79,000 விலையில் வெளியிடப்பட உள்ள ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக்கிற்கு நாட்டில் உள்ள அனைத்து டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக்

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முறையாக காட்சிக்கு வந்த 160 சிசி எஞ்சின் பெற்ற எக்ஸ்-பிளேடு மாடல் சந்தையில் உள்ள CB ஹார்னெட் 160R மாடலுக்கு கீழாக யமஹா FZ V2, டிவிஎஸ் அப்பாச்சி RTR 160, சுசூகி ஜிக்ஸெர் மற்றும் பஜாஜ் பல்சர் 160NS ஆகிய மாடல்களை எதிர்கொள்ள வெளியிடப்பட்டுள்ளது.

முதன்முறையாக 160சிசி சந்தையில் முழுமையான எல்இடி ஹெட்லேட் கொண்ட மாடலாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ்-பிளேட் பைக்கில் ஹெட்லைட் வடிவமைப்பபு மனித முக அமைப்பை பெற்ற ரோபோவின் முகத்தினை போன்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுமையான டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை பெற்றுள்ள இந்த பைக்கில், சர்வீஸ் இன்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் உட்பட பல்வேறு அம்சங்களுடன் அபாய விளக்குகள், எல்இடி டெயில் விளக்கு ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஹோண்டா CB ஹார்னெட் 160R பைக்கில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சினை பெற உள்ள எக்ஸ-பிளேட் பைக்கில் 13.9hp ஆற்றலை வெளிப்படுத்தும் 162.7சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது. இதன் டார்க்  13.9Nm ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் 276mm  கொண்ட டிஸ்க் பிரேக் வசதியுடன் பின்புறத்தில் 130mm டிரம் பிரேக் கொண்டதாக 140 கிலோ எடை உள்ள இந்த பைக்கில் 12 லிட்டர் கொள்ளளவு பெற்ற டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டிலுள்ள அனைத்து ஹோண்டா டீலர்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள எக்ஸ்-பிளேட் மாடலுக்கு விற்பனைக்கு மாரச் முதல் வாரத்தில் மற்றும் டெலிவரி மாரச் மாத மத்தியில் வழங்கப்பட உள்ளது. இந்த பைக்கில் கருப்பு, சிவப்பு, நீலம், சில்வர் மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது

ஹோண்டா எக்ஸ்-பிளேடு பைக் விலை ரூ.79,000 (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Exit mobile version