2019 ஹோண்டா ஆக்டிவா 125 BS-VI விற்பனைக்கு அறிமுகமானது

0

ஹோண்டா ஆக்டிவா 125 எஃப்ஐ

ரூ. 67,490 ஆரம்ப விலையில் தொடங்குகின்ற 2019 ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் BS-VI மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜின் FI உடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு வசதிகள் மற்றும் ஸ்டைலிங்கான தோற்றம் 4 நிறங்களை பெற்றதாக வந்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற இரு சக்கர வாகனங்களில் முதன்மையான இடத்தில் உள்ள ஹோண்டா ஆக்டிவா வரிசையில் ஆக்டிவா, ஆக்டிவா ஐ மற்றும் ஆக்டிவா 125 ஆகிய மூன்று ஸ்கூட்டர்கள் கிடைக்கின்றது. மேம்படுத்தப்பட்ட புதிய ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் சிறப்புகளை தொடர்ந்து காணலாம்.

ஹோண்டா ஆக்டிவா 125

ஹோண்டாவில் Enhanced Smart Power (eSP) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த என்ஜின் PGM-FI , குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று நுட்பத்தை பெற்றதாக வந்துள்ளது. அதிக ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் அதிகபட்சமாக எரிபொருளுளை எரிக்கும் தன்மை கொண்டுள்ளது. இதன் காரணமாக சிறப்பான மைலேஜ் கிடைக்க உள்ளது. ஆக்டிவா 125 எஃப்ஐ பல்வேறு புதிய வசதிகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 8.1 bhp பவர் மற்றும் 10.45 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 13 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாகும். முந்தைய பிஎஸ் 4 மாடலை விட 8.52 bhp பவரை வெளிப்படுத்தியது.

மேலும் ஆக்டிவா 125 ஸ்கூட்டரினை ஸ்டார்ட் செய்யும் போது சத்தமில்லாமல் இருக்க ACG மோட்டார் நுட்பத்தினை பயன்படுத்தியுள்ளது. இந்த மாடலில் ஐடியல் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. நிகழ் நேரத்தில் எரிபொருள் இருப்பு, மைலேஜ், உள்ளிட்ட வசதிகளை அறிவதற்கான புதிய புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில், சைடு ஸ்டேண்டு இன்டிகேட்டர், ஸ்டைலிஷான தோற்றத்தை வழங்குகின்ற எல்இடி ஹெட்லைட்,  இருக்கை அடியில் உள்ள ஸ்டோரேஜ், முன்புற அப்ரானில் க்ளோவ் பாக்ஸ் மற்றும்  வெளிப்புறத்தில் உள்ள பெட்ரோல் நிரப்பிக் கொள்ள டூயல் ஸ்விட்ச் ஆப்ஷன் போன்றவறை கொண்டுள்ளது.

ஆக்டிவா ஸ்கூட்டரின் முன்புற டயரில் டிஸ்க் பிரேக் உடன் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் இடம்பெற்றுள்ளது. பின்புற டயரில் டிரம் பிரேக் ஆப்ஷன் உள்ளது. மேலும் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சைடு ஸ்டேன்டு உள்ள சமயத்தில் வாகனத்தை ஸ்டார்ட் செய்வதனை தடுக்கும் இன்ஜின் இன்ஹைபிடார் பெற்றுள்ளது.

ஆக்டிவா 125 ஸ்கூட்டருக்கு 3 வருட வாரண்டி மற்றும் கூடுதலாக 3 வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டி என மொத்தமாக 6 வருட வாரண்டி வழங்கப்படுகின்றது. ஸ்டாண்டர்டு, அலாய் மற்றும் டீலக்ஸ் என மூன்று வேரியண்டுகளில் கிடைக்க உள்ளது.

BS-VI Honda Activa 125 Drum (Standard) – ரூ. 67,490

BS-VI Honda Activa 125 Drum (Alloy) – ரூ. 70,990

BS-VI Honda Activa 125 Disc (Deluxe) – ரூ. 74,490

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)