Automobile Tamilan

120 கிமீ ரேஞ்சுடன் பென்லிங் ஆரா மின் ஸ்கூட்டர் அறிமுகமானது

benling aura scooter

குறைந்த வேகத்தை கொண்ட மின் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்ற பென்லிங் ஆரா தனது அதி வேக ஸ்கூட்டரை ஆரா என்ற பெயரில் மணிக்கு அதிகபட்சமாக 60 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன் சிங்கிள் சார்ஜில் 120 கிமீ பயணிக்கும் திறனை பெற்றதாக விளங்க உள்ளது.

சீனாவை தலைமையிடமாக கொண்ட பென்லிங் நிறுவனம், இந்தியாவில் முதற்கட்டமாக உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி உட்பட தேசிய தலைநகர் பகுதியில் குறைந்த வேகம் மற்றும் ரேஞ்சு கொண்ட ஃபால்கான், ஐகான் மற்றும் கீர்தி போன்ற ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில், தனது அதிவேக மாடலான ரெட்ரோ ஸ்டைலை பெற்ற ஆரா ஸ்கூட்டரை 11வது EV எக்ஸ்போ 2019 அரங்கில் காட்சிப்படுத்தியது. இந்த மாடலை முன்பாக 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் நாடு முழுவதும் விற்பனைக்கு வெளியிட உள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மணிக்கு அதிகபட்சமாக 60 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை வங்க வல்ல 2500 வாட்ஸ் 72 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு 72V/40Ah லித்தியம் ஐயன் பேட்டரி இடம்பெற்றுள்ளதால் அதிகபட்சமாக 120 கிமீ ரேஞ்சை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பென்லிங் ஆரா ஸ்கூட்டரின் விலை ரூ.90,000 (எக்ஸ்-ஷோரூம்) அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ஃபேம் 2 ஆம் கட்ட ஊக்கத் தொகை சலுகைகள் கிடைக்கும். பஜாஜின் சேட்டக், மற்றும் ஏதெர் 450 ஆகிய ஸ்கூட்டர்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version