கொரோனா வைரஸ் : எக்ஸ்ட்ரீம் 160ஆர் விற்பனைக்கு எப்போது?

0

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரு சக்கர வாகனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப்பின் எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக் விற்பனைக்கு வெளியிடுவது கொரோனா வைரஸ் பரவலால் தாமதமாகும் என எதிர்பார்க்கபடுகின்றது.

முதற்கட்டமாக மார்ச் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், ஹீரோ உட்பட அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் முடங்கியுள்ளதால் பெரும்பாலான நிறுவனங்களின் புதிய மாடல்களின் அறிமுகம் தள்ளிப் போக துவங்கியுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் என்ஜின் மிக நேர்த்தியாக ட்யூன் செய்யப்பட்டு மிக சிறப்பான முறையில் அதிகபட்சமாக 8,500rpm-ல் 15.2 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 14 என்எம் டார்க் வெளிபடுத்தும்.

எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் உடன் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் அம்சத்தை பெற்றிருப்பதுடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் முன்பக்க டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இரு விதமான வேரியண்டில் கிடைக்க உள்ளது.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவுதல் பாதிப்பு குறையும் போது வாகன உற்பத்தி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதம் விற்பனைக்கு வரக்கூடும்.