Automobile Tamilan

இந்தியா வருகையா.., அசத்தலான யமஹா MT-125 பைக் வெளியானது

யமஹா எம்டி-125

யமஹா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம், யமஹா எம்டி-15 பைக்கின் அடிப்படையில் 125சிசி என்ஜின் பெற்ற யமஹா MT-125 ஐரோப்பா சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. யமஹாவின் எம்டி-15 இந்தியாவில் கிடைக்கின்ற நிலையில் எம்டி-125 வருகை குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

தோற்ற அமைப்பினை பொருத்தவரை நேரடியாகவே இந்தியாவில் கிடைக்கின்ற எம்டி-15 போன்றே இந்த பைக்கின் வடிவமைப்பானது எம்டி-125 மாடலுக்கு கொண்டுள்ளது. ஸ்போர்ட்டிவான எல்இடி புராஜெக்டர் விளக்குடன் நேரத்தியான எல்இடி ரன்னிங் விளக்குகளும் உள்ளது. ஃபிளாட் டைப் ஹேண்டில் பார் உட்பட நேர்த்தியான டெயில் வடிவத்தையும் கொண்டுள்ளது. இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட மாடல் முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க், அலுமியம் கேஸ்ட் ஸ்விங்கிராம் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றிருக்கின்றது.

MT-125 ஸ்போர்ட்டிவ் பைக்கில் 124.7 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜினில் MT-15 மற்றும் YZF-R15 V3 மாடலில் உள்ளதை போன்ற VVA நுட்பத்துடன் 9,000 ஆர்.பி.எம்மில் 14.5 பிஹெச்பி பவருடன், 8,000 ஆர்.பி.எம் மில் 12.4 என்எம் வெளிப்படுத்துகின்றது. ஸ்லிப்பர் கிளட்சின் ஆறு வேக மெஷ் கியர்பாக்ஸால் இயக்குப்படுகின்றது. எம்டி -125 மாடல் 140 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் மற்றும் 140 கிலோ எடையை கொண்டுள்ளது.

ஐரோப்பிய சந்தையில், யமஹா புதிய எம்டி -125 மாடல் ஐஸ் ஃப்ளூ, ஐகான் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வழங்கவுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் டிசம்பர் 2019  ஷோரூம்களில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய சந்தையைப் பொருத்தவரை, யமஹா எம்டி-125 வெளியாகும் வாய்ப்பில்லை.

Exit mobile version