Automobile Tamilan

மாருதி இக்னிஸ் மினி எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் முதன்மையான தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் மாருதி இக்னிஸ் எஸ்யூவி ரூ. 4.59 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இக்னிஸ் எஸ்யூவி நெக்ஸா டீலர்கள் வழியாக விற்பனை செய்யப்பட உள்ளது.

 

1980 களில் பிறந்த இளைய தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வாகையிலும் கவரும் தோற்ற அமைப்பை பெற்றுள்ள இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷ்களுடன் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்சுடனும் கிடைக்கின்றது.

இக்னிஸ் கார் டிசைன்

நவீனத்துவமான க்ராஸ்ஓவர் ரக கார் மாடல்களை அடிப்படையாக கொண்ட இக்னிஸ் காரின் முகப்பில் புராஜெக்டர் முகப்பு விளக்குடன் இணைந்த ப வடிவ பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்கினை பெற்று நேர்த்தியான தேன்கூடு கிரில் வட்ட வடிவ பனி விளக்கினை பெற்று விளங்குகின்றது.

இக்னிஸ் காரில் மொத்தம் 9 நிறங்களில் கிடைக்கும். அவை வெள்ளை ,  சிவப்பு , கிரே  , சில்வர் , அர்பன் நீலம் , டின் செல் நீலம் போன்றவற்றுடன் இரு வண்ண கலவை மாடல்களாக நீல வண்ணத்துடன் கருப்பு கலவை , சிவப்பு நிறத்துடன் கருப்பு கலவை மற்றும்  நீல வண்ணத்துடன் வெள்ளை கலவை என இந்த மூன்று நிறங்களும் ஜெட்டா மற்றும் ஆல்ஃபா வேரியன்டில் மட்டுமே கிடைக்கும்.

2438மிமீ வீல்பேஸ் பெற்று தாரளமான இடவசதியுடன் தொடுதிரை ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஸ்மார்ட்போன் ஆதரவுடன் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே , ரிவர்ஸ் கேமரா , பார்க்கிங் சென்சார்கள் ,  இருவண்ண கலவையில் மூன்று விதமான இன்டிரியர் டேஸ்போர்டு , புதிய ஸ்டீயரிங் வீல் போன்றவை பெற்றுள்ளது.

இக்னிஸ் எஞ்சின் விபரம்

மாருதி நிறுவனத்தின் ஆஸ்தான என்ஜினாக கருதப்படும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 75 ஹெச்பி பவருடன் , 190 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் (டெல்டா & ஜெட்டா) இடம்பெற்றுள்ளது.

பெட்ரோல் மாடலில்  1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு அதிகபட்சமாக 83 ஹெச்பி பவருடன் , 113 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் (டெல்டா & ஜெட்டா) இடம்பெற்றுள்ளது.

சிக்மா , டெல்டா , ஜெட்டா மற்றும் ஆல்ஃபா என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களை கொண்டுள்ளது.

இக்னிஸ் பாதுகாப்பு வசதிகள்

அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களாக கருதப்படும் முன்பக்க இரு காற்றுப்பை ,  ஏபிஎஸ் , இபிடி போன்றவை நிரந்தர அம்சமாக அனைத்து ரகத்திலும் கிடைக்கும். கூடுதலாக உயர்ரக வேரியன்டில் ரியர் பார்க்கிங் சென்சார் , ரியர் பார்க்கிங் கேமரா போன்றவை இடம்பிடித்துள்ளது.

போட்டியாளர்கள்

கேயூவி100 எஸ்யூவி காருக்கு நேரடியான போட்டியாளராக வந்துள்ள இக்னிஸ் காரின் மற்ற போட்டி கார்கள் எலைட் ஐ20 ஏக்டிவ் , ஃபியட் அவென்ச்சூரா , அர்பன் க்ராஸ் மற்றும் ஈக்கோஸ்போர்ட் போன்றவை ஆகும்.

மாருதி இக்னிஸ் கார் விலை

மாருதி இக்னிஸ் பெட்ரோல் விலை பட்டியல்

இக்னிஸ் சிக்மா – ரூ.4.59 லட்சம்

இக்னிஸ் டெல்டா – ரூ.5.19 லட்சம்

இக்னிஸ் ஜெட்டா – ரூ.5.75 லட்சம்

இக்னிஸ் ஆல்ஃபா – ரூ.6.69 லட்சம்

பெட்ரோல் ஏஎம்டி

இக்னிஸ் டெல்டா – ரூ.5.74 லட்சம் (ஏஎம்டி)

இக்னிஸ் ஜெட்டா – ரூ.6.30 லட்சம் (ஏஎம்டி)

மாருதி இக்னிஸ் டீசல் விலை பட்டியல்

இக்னிஸ் டெல்டா – ரூ. 6.39 லட்சம்

இக்னிஸ் ஜெட்டா – ரூ. 6.91 லட்சம்

இக்னிஸ் ஆல்ஃபா – ரூ. 7.80 லட்சம்

இக்னிஸ் டெல்டா – ரூ.6.94 லட்சம் (ஏஎம்டி)

இக்னிஸ் ஜெட்டா – ரூ.7.46 லட்சம் (ஏஎம்டி)

(அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை )

Exit mobile version