Site icon Automobile Tamilan

புதிய மாருதி சுசூகி எர்டிகா கார் அறிமுகமானது

இந்தோனேசியா மோட்டார் ஷோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரண்டாம் தலைமுறை சுசூகி எர்டிகா எம்பிவி கார் முந்தைய மாடலை விட கூடுதலான வசதிகள் மற்றும் அம்சங்களை பெற்று டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா காருக்கு எதிராக நிலை நிறுத்தப்பட உள்ளது.

மாருதி சுசூகி எர்டிகா கார்

தற்போது விற்பனையில் உள்ள எர்டிகா மாடலை விட கூடுதலான நீளம் மற்றும் அகலம் கொண்டதாக வந்துள்ள இந்த மாடலின் வீல்பேஸ் 2470 மிமீ ஆக அமைந்திருக்கின்றது. முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய முகப்பு அமைப்புடன் , தட்டையான ஹெட்லைட், பம்பர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்கினை கொண்டதாக அமைந்துள்ளது.

சுசூகி நிறுவனத்தின் ஹெர்டெக்ட் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய எர்டிகா காரின் இன்டரியர் அமைப்பின் தோற்ற பொலிவு புதிய ஸ்விஃப்ட் காரின் உந்துதலில் வடிவமைக்கப்பட்டு இரட்டை நிறத்திலான டேஸ்போர்டினை கொண்டு 6.8 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

இந்தோனேசியா சுசூகி எர்டிகா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 104 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 வேக ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது.

இந்தியாவில் புதிய மாருதி சுசூகி எர்டிகா எம்பிவி கார் வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

பட உதவி – Autonetmagz

Exit mobile version