ஜூன் மாதம் முதல் ஹூண்டாய் கார்கள் விலை உயருகின்றது

0

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடலை தவிர ஹூண்டா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் , கார் மற்றும் எஸ்யூவி ரக மாடல்கள் விலையை 2 சதவீதம் உயர்த்துவதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதால், ரூ. 50,000 வரை விலை உயர வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் கார்கள்

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் நிறுவனம், மாறி வருகின்ற சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப விலை உயர்வினை அறிவித்துள்ளது. குறிப்பாக உயர்ந்து வரும் இறக்குமதி செய்து ஒருங்கினைக்கப்படுகின்ற பாகங்களுக்கான வரி உயர்வு, எரிபொருள் விலை உயர்வின் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து செலவினங்கள் மற்றும் சில உதிரிபாகங்களுக்கு சுங்க வரி உயரத்தப்பட்டுள்ளதால் விலை உயர்வினை தவிர்க்க இயலவில்லை என இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் பிரிவு இயக்குநர் ராகேஷ் ஶ்ரீவஸ்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை உயர்வு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹூண்டாய் க்ரெடா ஃபேஸ்லிஃப்ட் மாடலை தவிர மற்ற அனைத்து மால்களுக்கும் அதிகபட்சமாக 2 சதவீத விலை உயர்வு நிர்ணயம் செய்யப்படுள்ளது.

இதற்கு முன்பாக கடந்த ஜனவரி 2017 யில் ஒருமுறை இரண்டு சதவீதம் விலை உயர்வை அறிவித்திருந்தது குறிப்பிடதக்கதாகும்.