Automobile Tamilan

பிப்ரவரி 14.., புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனைக்கு அறிமுகம்

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள மாருதி சுசுகி புதிய விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி பெட்ரோல் என்ஜின் பெறுவதுடன் தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியரிலும் மேம்பட்ட வசதிகளை பெற்றுள்ளது.

2016 ஆம் ஆண்டு முதன்முறையாக விற்பனைக்கு வெளியான இந்த மாடல் 5 லட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கு முன்பதிவு துவங்கப்பட்டு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படுகின்ற நிலையில், விநியோகம் 6 முதல் 8 வாரங்களுக்குள் வழங்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது. விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காரில் தற்போது குறிப்பிடதக்க பல்வேறு மாற்றங்கள் பெற்றிருப்பதுடன் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. முந்தைய ஃபியட் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மாருதி சியாஸ், எர்டிகா மற்றும் எக்ஸ்எல் 6 கார்களில் பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு ஆதரவான 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் சுசூகியின் SHVS நுட்பத்துடன் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெற உள்ளது.

விட்டாரா பிரெஸ்ஸா பெட்ரோல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 18.7 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 18.76 கிமீ ஆகும்.

புதுப்பிக்கப்பட்ட முன்புற பம்பருடன் புதிய புராஜெக்டர் எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல் விளக்குகள், எல்இடி டெயில் லைட் உட்பட 16 அங்குல அலாய் வீல், புதிய டெயில்கேட் மற்றும் பின்புற பம்பரை கொண்டதாக வெளியிடப்பட உள்ளது. புதிதாக நீலம் மற்றும் சிவப்பு நிறம் சேர்க்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான ஹூண்டாய் வென்யூ உட்பட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான், வரவுள்ள கியா சோனெட் போன்ற மாடல்களை 2020 சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா எதிர்கொள்ள உள்ளது.

Exit mobile version