Site icon Automobile Tamilan

ரூ. 31.54 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகமானது 2018 மிட்சுபிஷி அவுட்லேன்டர் எஸ்யூவி

மிட்சுபிஷி நிறுவனம் தனது புதிய ஜெனரேசன் காரான 2018 மிட்சுபிஷி அவுட்லேன்டர் எஸ்யூவி-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் விலை 31.54 லட்ச ரூபாயாகும் (எக்ஸ் ஷோரூம் விலை மும்பையில்). கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த எஸ்யூவிக்கான முன்பதிவை தொடக்கியுள்ள மிட்சுபிஷி நிறுவனம், தற்போது காரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மிட்சுபிஷி அவுட்லேண்டர் கார்கள், 2.4 லிட்டர், நான்கு சிலிண்டர் மோட்டார் கொண்டது. இந்த மோட்டார் 167PS மற்றும் 222Nm ஆற்றல் கொண்டது. இத்துடன் 6 ஸ்பீட் CVT மற்றும் பெடல் ஷிபிட்னர்களை கொண்டுள்ளது. எஸ்யூவிகளுடன் உருவாகப்பட்டுள்ள மோனோகாயூ, தேர்ந்தெடுக்கப்பட்ட முறைகளை கொண்ட எலக்ட்ரானிக் கருவிகளையும், 4- வீல் டிரைவ் சிஸ்டத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.

சர்வதேச தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள வெளிபுறத் தோற்றத்துடன் கூடிய இந்த கார், ஏழு சீட் லேஅவுட் மற்றும் கருப்பு வண்ணத்தில் டிரிம் செய்யப்பட்ட உள்கட்டமைப்புடன், ஆட்டோமேடிக் ஹெட்லைட்கள் ம்ற்றும் வைப்பர்கள், டுயல் டோன் கிளைமேட் கண்ட்ரோல், சன்ரூப், எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்ட், கீலெஸ் என்ட்ரி மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஹீட்டட் சீட் மற்றும் 6.1 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடேய்ன்மென்ட், இதில் 710W ராக்போர்ட் போஸ்கேட் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பை பொறுத்த வரையில், ஏழு ஏர்பேக்கள், ABS, EBD ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார்கள் பெட்ரோல் வகைகளில் மட்டும் கிடைக்கும் என்பதால், ஸ்கோடா கோடியாக் மற்றும் வரவிருக்கும் ஹோண்டா CR-V கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று டீலர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version