Site icon Automobile Tamilan

2019ல் நடக்கும் மும்பை மாரத்தானில் அறிமுகமாக உள்ளது டாடா ஹாரியர்

முழுவதுமாக புதியதாக டிசைன் செய்யப்பட்டுள்ள டாட்டா ஹாரியர் கார்களை வரும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் நடக்க உள்ள மும்பை மாரத்தானில் அறிமுகமாக செய்ய உள்ளதாக டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த கார்கள் 2018 ஆட்டோ எக்ஸ்போ எஸ்யூவி கான்செப்ட்டில் உருவாக்கப்பட்டது. இந்த கார்கள் இந்தியா சாலைகளில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை நடத்தப்பட்ட இரண்டு மாதத்தில், இந்த கார்களின் பெயர் ஹாரியர் என்று டாட்டா நிறுவனம் அறிவித்தது.

ஐந்து சீட் அமைப்புடன் வர உள்ள இந்த கார்கள், இந்திய சந்தையில் ஹூண்டாய் டஸ்கன் மற்றும் ஜீப் காம்பஸ் வகை வாகனங்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரில் முன்புறம் சிலிக் LED ஹெட்லேம்களுடன் கூடிய பகலில் எரி’யும் லைட்கள் மற்றும் v-வடிவிலான கிரில்களும் பொருத்தப்பட்டுள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள், பின்புறத்தை பொறுத்த வரை இண்டகிரெட்டாட் ஸ்பாயிலர் மற்றும் சிலிம் வார்ப்அரவுண்ட் LED டைல்-லேம் கிள்ச்சரையும் கொண்டுள்ளது. இந்த எஸ்யூவி-களின் கேபினை பொறுத்த வரை, சில பிரீமியம் வசதிகளை கொண்டுள்ளது. டூயல் டோன் அப்ஹோல்ஸ்டிரி, புளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெய்ண்மென்ட் சிஸ்டம்களுடன், 3 ஸ்போக்ஸ் கொண்ட மல்டி பங்க்ஷன் ஸ்டீயரிங் வீல் மற்றும் இன்ஸ்டுரூமெண்ட் கிளச்சர்களை கொண்டுள்ளது. மேலும், அனலாக் ஸ்பீட்டோமீட்டர் மற்றும் டிஜிட்டல் கலர் ஸ்கீரின் பொருத்தப்பட்டுள்ளது.

மெக்கனிக்கல் மாற்றங்கை பொறுத்தவரை, ஹாரியர் எஸ்யூவி கார்கள் டீசல் கார்களாகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் இன்ஜின் இரண்டு டிரிம்களில் ஆற்றல் மற்றும் டார்க்யூவை வெளியிடுகிறது. அதாவது 148bhp களுடன் கூடிய 350Nm மற்றும் 170bhp உடன் கூடிய 350Nm ஆற்றல்கொண்டதாக இருக்கும். இதுமட்டுமின்றி இந்த இன்ஜின் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

AWD வகைகள் தற்போது வெளியிடபடுமா அல்லது பின்னர் வெய்யிடப்படுமா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. டீசல் வகை கார்கள் அறிமுகம் செய்யும் போது, பெட்ரோல் வகை கார்கள் அறிமுகம் செய்யப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை. டாட்டா ஹாரியர் கார்களின் விலைகள் 17 லட்சம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம் விலை) முதல் தொடங்கும் என்றும், உயர்த்தர ஸ்பெக் கொண்ட வகைகள் 21 லட்ச ரூபாய் வரை இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

Exit mobile version