Automobile Tamilan

நெக்ஸான் EV உட்பட 4 எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் டாடா மோட்டார்ஸ்

tata altroz ev

அடுத்த 18 மாதங்களில் டாடா நெக்ஸான் EV காம்பாக்ட் எஸ்யூவி உட்பட மொத்தம் நான்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற டாடாவின் 74வது வருடாந்திர கூட்டத்தில் பங்குதரர்களிடம் பேசிய டாடா மோட்டார்ஸ் சேர்மென் N. சந்திரசேகரன் கூறுகையில் ”இந்தியாவில் அடுத்த 18 மாதங்களுக்குள் நான்கு மின்சார பேட்டரியில் இயங்கும் கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நான்கு கார்களில் ஒன்றாக டாடாவின் பிரசத்தி பெற்ற காம்பாக்ட் ரக எஸ்யூவி மாடலான நெக்ஸானும் இடம்பெறவது உறுதியாகியுள்ளது. ஆல்ட்ரோஸ் EV, டிகோர் EV, நெக்ஸான் EV மற்றும் நான்காவது மாடல் குறித்தான பெயர் வெளியிடப்படவில்லை. குறிப்பாக சில வாரங்களுக்கு முன்பாக டிகோர் எலக்ட்ரிக் கார் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு ஏற்றதாக ரூபாய் 9 லட்சத்து 99 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த கார் பல்வேறு மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்ட தனிநபர் சந்தைக்கும் விற்பனைக்கு வரவுள்ளது.

ஆல்ட்ரோஸ் EV, மற்றும் நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் மிக விரைவாக DC சார்ஜர் மூலம் 60 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜிங் நிரம்புவதுடன், முழுமையான சிங்கிள் சார்ஜிங்கில் அதிகபட்சமாக 250 கிமீ முதல் 300 கிமீ ரேஞ்ச் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விற்பனையில் உள்ள டிகோர் பேட்டரி காரில் 16.2 கிலோவாட் பேட்டரி மூலம் இயக்கப்படுகின்றது, இது 30 கிலோவாட் (41 hp) பவரை 4,500 ஆர்.பி.எம் சுழற்சியிலும், 105 Nm டார்க் 2,500 ஆர்.பி.எம்மில் வெளிப்படுத்துகின்றது. 72 வோல்ட், 3-கட்ட ஏசி இன்டெக்‌ஷன் மோட்டார் மூலம் முன் சக்கரங்களுக்கு பவரை அனுப்புகிறது.

இந்த காரில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி திறன் மூலம் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக  142 கிமீ வரை பயணிக்கலாம் என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு நிலையான ஏசி சார்ஜர் வழியாக 6 மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும், ஒரு டிசி 15 கிலோவாட் வேகமான சார்ஜர் வாயிலாக இதனை 90 நிமிடங்களில் பெற முடியும்.

வரும் ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியில் டாடா நிறுவன மின்சார கார்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. சமீபத்தில் மத்திய அரசு மின்சார வாகனங்கள் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் 12 சதவீத ஜிஎஸ்டி வரியிலிருந்து 5 சதவீதமாக குறைத்துள்ளது.

Exit mobile version