Automobile Tamilan

டாடா மோட்டார்சின் புதிய டாடா நெக்ஸான் XZ வேரியன்ட் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனையில் சிறப்பான வளர்ச்சி பெற்று வரும் டாடா மோட்டார்ஸ் , கடந்த ஆண்டு வெளியிட்ட காம்பேக்ட் ரக நெக்ஸான் எஸ்யூவி மாடலில் டாப் XZ+ வேரியன்டில் சில வசதிகளை நீக்கி விட்டு XZ வேரியன்ட் மாடலை ரூ. 7.99 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

டாடா நெக்ஸான் XZ

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், காம்பேக்ட் ரக எஸ்யூவி சந்தையில் மிக கடுமையான போட்டியை எதிர்கொண்டு வரும் நெக்ஸான் தொடர்ந்து விற்பனையில், தனது சிறப்பான வடிவமொழி மற்றும் செயல்திறன் காரணமாக அமோக வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.

நெக்ஸான் எக்ஸ்இசட் மாடலில் பகல் நேர ரன்னிங் விளக்குகள், அலாய் வீல், முன் மற்றும் பின் இருக்கை ஹேண்ட் ரெஸ்ட், 60 ; 40 மடக்கும் வகையிலான இருக்கை அமைப்பு, ஸ்மார்ட் கீ உடன் இணைந்த புஸ் ஸ்டார்ட் பட்டன், முன் மற்றும் பின் பனி விளக்குகள் மற்றும் டீஃபோகர் ஆகிய வசதிகளை  டாப் XZ+ வேரியன்டலிருந்து XZ மாடல் இழந்துள்ளது.

ஆனால் தொடர்ந்து புராஜெக்டர் ஹெட்லைட், ஹார்மன் 6.5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ , வாய்ஸ் கமாண்ட், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட வசதிகள் தொடர்ந்து கிடைக்கப்பெற உள்ளது.

எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெவோடார்க் வரிசையில் புத்தம் புதிதாக வரவுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும்  6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இந்த பிரிவில் முதன்முறையாக மல்டி டிரைவ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோடின் வாயிலாக நெக்சன் எஸ்யூவி மாடலை ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான டிரைவிங் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக கன்சோல் கியர் லிவர் பகுதியில் டயல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மூன்று விதமான மோட்களில் நமக்கு தேவையானதை மாற்றிக் கொள்ளலாம்.

ஈக்கோ டிரைவிங் மோட் அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை பெற உதவும்.

சிட்டி டிரைவிங் மோட் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஓட்டுவதற்கு சிறப்பானதாக இருக்கும்.

ஸ்போர்ட் டிரைவிங் மோட் மூலமாக அதிக செயல்திறனை பெற வழிவகுக்கும் பயணத்தை தேற்கொள்ளலாம்.

டாடா நெக்ஸான் XZ பெட்ரோல் – ரூ.7.99 லட்சம்

டாடா நெக்ஸான் XZ டீசல் – ரூ.8.99 லட்சம்

(எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

ஆட்டோ எக்ஸ்போ 2018 கண்காட்சியில் அறிமுகம் செய்யபட்ட ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் மே மாதம் மத்தியில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version