விரைவில்.., டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியாகிறது

0

toyota urban cruiser teased

மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா காரினை பின்பற்றி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி வருகையை உறுதி செய்யும் வகையில் முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டொயோட்டா-சுசூகி நிறுவன கூட்டணியின் ஒரு பகுதியாக முதல்முறையாக பலேனோ காரின் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட கிளான்ஸா அமோக வரவேற்பினை பெற்று தந்துள்ளதால், அடுத்த மாடலாக பிரசத்தி பெற்ற விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி காரின் ரீபேட்ஜ் மாடலாக அர்பன் க்ரூஸர் எஸ்யூவி விளங்க உள்ளது.

காரின் தோற்ற அமைப்பினை பொறுத்தவரை, முன்புற பம்பர் மற்றும் கிரில் அமைப்புகளில் மாற்றங்களை கொண்டிருப்பதனை உறுதி செய்யும் வகையில் டீசர் வெளியாகியுள்ளது.. மற்றபடி, பக்கவவாட்டு தோற்ற அமைப்பு, ரியர் வியூ இன்டிரியரில் எந்த மாற்றங்களும் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.

1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் SHVS ஹைபிரிட் நுட்பத்துடன் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது.

அர்பன் க்ரூஸர் காரின் பெட்ரோல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 17.03 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 18.76 கிமீ ஆகும். இது நிகழ் நேரத்தில் இந்த காரின் மைலேஜ் லிட்டருக்கு 14 கிமீ முதல் 16 கிமீ வரை வழங்கும். மைலேஜ் விபரம் விட்டாரா பிரெஸ்ஸாவின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆபஷனை பெற டொயோட்டா அர்பன் க்ரூஸர் விலை ரூ.7.50 லட்சத்தில் துவங்குவதுடன் ஆகஸ்ட் மாத இறுதியில் விற்பனைக்கு வெளியாகலாம்.