புதிய கார் வாங்க போறிங்களா – டிப்ஸ்

புதிய கார் வாங்கும்பொழுது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? புதிய கார் வாங்க தெரிந்து கொள்ள வேண்டிய டிப்ஸ் ?
mahindra-xuv500
கார் , மோட்டார்சைக்கிள் என நாம் அன்றாட பயன்படுத்தும் வாகனங்களின் விற்பனையில்  நாளுக்கு நாள் புதிய உயரங்களை எட்டி வருகின்றன.ஆனால் எரிபொருள் விலை அதற்க்கும் மேலே பல உயரத்தினை தொடுகின்றது.
கார் வாங்குமுன் கவனிக்க வேண்டிய சில முக்கிய காரணிகளை கானலாம் இந்த பதிவில்…கார் வாங்க வேண்டும் என முடிவெடுத்து விட்டீர்கள் எனில் நீங்கள் பல காரணிகளை கருத்தில் கொள்ளுங்கள். புதிய கார் வாங்க விரும்புபவர்களுக்காக இந்த பதிவு…
பல பிரிவான கார்கள் இருந்தாலும் இந்த 4 பிரிவுகளில் பெரும்பாலும் கார்கள் விற்பனையில் உள்ளன. அவை ஹேட்ச்பேக், செடான், எஸ்யூவி/எம்பிவி, மற்றும் சொகுசு கார்.
1. தனிநபர் தேவைக்கு காரா அல்லது குடும்ப தேவைக்கா என்பதில் கவனம் கொள்ளுங்கள். தினமும் அலுவலகம் செல்ல பயன்படுத்த கார் அல்லது எப்பொழுதாவது வெளியூர் குடும்பத்துடன் செல்ல அல்லது தொழில் முனைவர்களுக்கான பயணங்களுக்கு காரா என..
2.  தனிநபர்களுக்கு அலுவலகம் செல்ல மேலும் எப்பொழுதாவது குடும்பத்துடன் வெளியூர் செல்பவர் என்றால் ஹேட்ச்பேக் கார்களை முயற்ச்சிக்கலாம்.
குடும்பத்துடன் வெளியூர் செல்ல 7 முதல் 10 நபர்கள் வரை செல்பவராக இருந்தால் எஸ்யூவி கார்களை வாங்கலாம்.
தொழில் முனைவர்களாக நீங்கள் இருந்தால் வெளிமாநிலம் போன்றவைகள் அதிகம் செல்பவராக இருந்தால் சொகுசு கார்களை வாங்கலாம்.
 சொகுசு கார் வாங்க  தொழில் முனைவராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை பணம் இருந்தால் வாங்கலாம்.
 நீங்கள் மேலே குறிப்பிட்ட பிரிவில் எதுவாக இருந்தாலும் சரி பொதுவாக பலரும் பரிந்துரைக்கும் கார் செடான் வகையாகத்தான் இருக்கும்.
3.  விலை குறைவு ,மைலேஜ் என்பதனை மட்டும் மனதில் வைத்து புதிய கார் வாங்குவதனை தவிர்க்க பாருங்கள்.
காரணம் உங்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யுங்கள். உங்கள் புதிய கார் பாதுகாப்பு வசதிகள் உங்களின் பயணத்தை மேலும் சுகமாக்குகின்றது.
 பாதுகாப்பு வசதிகள் உள்ள கார்கள் விலை சற்று கூடுதல்தான். ஆனால் பணததைவிட பாதுகாப்பு முக்கியம்…
செடான் கார்கள் மூன்று இனைப்பாக இருக்கும் பாதுகாப்பாக இருக்கும்..
4.  உங்கள் பட்ஜெட் ரொம்ப முக்கியமான விசயம் எல்லாருக்குமே. 1 இலட்சம் முதல் 22 கோடி வரை விலையுள்ள கார்கள் உலகில் மட்டுமல்ல இந்தியாவிலும் கிடைக்கின்றது.
 5 முதல் 8 இலட்சம் உங்கள் பட்ஜெட் எனில் உங்கள் பட்ஜெட்க்குள் உள்ள கார்கள் அனைத்தையும் அலசி பார்த்து விடுங்கள்.
5. அடுத்த முக்கியமான ஒன்று எரிபொருள் டீசல் கார் அல்லது பெட்ரோல் கார் எதை தேர்வு செய்யலாம். இதற்க்கு தனியாக பதிவே எழுத வேண்டும்
தொடர்ந்து கார் வாங்கலாம்…காத்திருங்கள்
Exit mobile version