Automobile Tamilan

₹ 7.99 லட்சத்தில் மஹிந்திரா வீரோ டிரக்கின் சிறப்பம்சங்கள்

mahindra veero truck

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள மஹிந்திரா நிறுவனத்தின் வீரோ மினி டிரக் மாடலில் ஆரம்ப விலை ₹7.99 லட்சத்தில் துவங்குகின்றது. இந்த மாடலில் முதற்கட்டமாக சிஎன்ஜி மற்றும் டீசல் என இரண்டும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் கூடுதலாக எலெக்ட்ரிக் மாடல் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகலாம்.

SCV பிரிவில் தனித்து விளங்கும் வகையில் தனித்துவமான கிரில் மற்றும் செங்குத்து ஹெட்லேம்ப்களை பெற்றுள்ள நிலையில் மஹிந்திரா வீரோ டிரக்கில் கார் போன்ற நவீனத்துவமான வசதிகளை பெற்றுள்ளது.

59.7 kW (80 hp)மற்றும் 210 Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் mDI டீசல் எஞ்சின் அடுத்து, 67.2 kW (90 hp) மற்றும் 210 Nm டார்க்கினை வெளிப்படுத்துகின்ற டர்போ mCNG எஞ்சின் என இரண்டிலும் 5 வேக கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ள மஹிந்திரா வீரோ வாகனத்தின் சிறந்த முறையில் சுமையை தாங்குவதற்கான அகலான கார்கோ பெட்டில் பேலோடு 1,600 கிலோ டீசல் மற்றும் 1,500 கிலோ சுமையை சிஎன்ஜி மாடலில் எடுத்துச் செல்லலாம்.

வீரோ டிரக்கின் டீசல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 18.4 கிமீ, சிஎன்ஜி வேரியன்ட் கிலோ ஒன்றுக்கு 19.2 கிமீ ஆக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

V2, V2(A), V4, V4(A) மற்றும் V6 என 5 வேரியண்டுகளை பெற்று ஸ்டாண்டர்டு, ஹைடெக் என இரு கார்கோ பாடியை கொண்டுள்ள இந்த மாடலில் டாப் வேரியண்டாக அறியப்படுகின்ற V6-ல் ஓட்டுனருக்கு ஏர்பேக், 10.25 அங்குல TFT தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,  iMaxx கனெக்ட்டேட் நுட்பம், பார்க்கிங் செய்வதற்கான ரிவர்ஸ் கேமரா, ஹீட்டர் மற்றும் ஏசி உள்ளிட்ட அம்சங்களை கொண்டு இருக்கின்றது.

XL மற்றும் XXL என இருவிதமாக ஸ்டாண்டர்ட் டெக் மற்றும் ஹை டெக் ஆகிய இரண்டிலும், 2765 மிமீ (9 அடி) மற்றும் 3035 மிமீ (10 அடி) சரக்கு ஏற்றுவதற்கான விருப்பங்களுடன், நீளமான சரக்கு பெட் கொண்டிருப்பதனால் மிக இலகுவாக, தனிப்பயனாக்கக்கூடிய சரக்குகளை ஏற்ற மாற்றிக் கொள்ளலாம்.

Mahindra Veero Price list

V2 (A),V4 (A) என இரண்டிலும் ரூ.15,000 கூடுதலாக செலுத்தினால் ஆப்ஷனலாக ஏர்பேக் பெற்றுக் கொள்ளலாம்.

Exit mobile version