Automobile Tamilan

பியாஜியோ அபே Xtra LDX+ ஆட்டோ விலை ரூ.2.65 லட்சம்

5f8db piaggio ape xtra ldx diesel

பியாஜியோ நிறுவனத்தின் அபே Xtra LDX+ லோடு டீசல் ஆட்டோ 6 அடி நீளம் கொண்ட கார்கோ ஸ்பேஸ் பெற்றதாக விற்பனைக்கு ரூ.2.65 விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பாக 5 அடி மற்றும் 5.5 அடி நீளம் பெற்ற மூன்று சக்கர வண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

அபே எக்ஸ்ட்ரா 5 அடி மற்றும் 5.5 அடி மாடல்களை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள கூடுதலை சுமை தாங்கும் திறன் பெற்ற 6 அடி நீளம் கொண்ட கார்கோ வண்டியில், பிஎஸ்-6 ஆதரவை பெற்ற சிங்கிள் சிலிண்டர், வாட்டர் கூல்டு 597.1 cc டீசல் இன்ஜின் 9.39 hp பவரை 3,600 rpm-லும், 23.5 Nm டார்க்கினை 2,000 rpm-ல் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

வழக்கமான அபே எக்ஸ்ட்ரா எல்.டி.எக்ஸ் உடன் ஒப்பிடும்போது, 6 அடி டெக் கொண்ட அபே ‘எக்ஸ்ட்ரா எல்.டி.எக்ஸ் + இப்போது 150 மிமீ வரை நீளம் அதிகரிக்கப்பட்டு 3295 மிமீ, 180 மிமீ வரை வீல்பேஸ் அதிகரிக்கப்பட்டதால் இப்போது 2100 மிமீ ஆக உள்ளது. மற்றபடி, அகலம் மற்றும் உயரம் முறையே 1490 மிமீ மற்றும் 1770 மிமீ கொண்டுள்ளது. மொத்த வாகன எடை (GVW) மாறாமல் 975 கிலோவாக உள்ளது.

பியாஜியோ வாகனங்கள் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநரும், டியாகோ கிராஃபி கூறுகையில், “பியாஜியோவில், இறுதி மைல் போக்குவரத்து பிரிவில் சிறப்பான தீர்வுகளை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்பங்களுடன் வழங்குவதாக நாங்கள் நம்புகிறோம். எங்கள் தயாரிப்புகளை BSVI பிரிவில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. நீண்ட டெக் அளவைக் கொண்ட அபே ‘எக்ஸ்ட்ரா எல்.டி.எக்ஸ் +, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்ட உதவும் என குறிப்பிட்டுள்ளார்.

முன்பாக விற்பனையில் உள்ள அபே எக்ஸ்ட்ரா எல்.டி.எக்ஸ் 5.5 அடி நீளம் பெற்ற மாடலை விட ரூ.2,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version