Automobile Tamilan

டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்கள் விலை 3 % உயருகின்றது

tata ace ht plus

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களை பிரிவை தொடர்ந்து வர்த்தக வாகனங்கள் விலையை 3 % வரை உயர்த்த உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜனவரி 2024 முதல் விலையை உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது.

நாட்டின் பல்வேறு ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்கள் வாகனங்களின் விலையை அதிகரிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

Tata Motors CV Price hike

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விலை உயர்வை டிசம்பர் முதல் வாரத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்பொழுது வர்த்தக வாகன சந்தையில் உள்ள அனைத்து மாடல்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்கள் விலை, உற்பத்தி செலவுகளை கருத்தில் கொண்டு சராசரியாக 3 சதவிகிதம் உயர்த்த உள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் சிறிய ரக வர்த்தக வாகன சந்தையில் இன்டரா வி70 பிக்கப் டிரக் உட்பட இன்ட்ரா வி20 சிஎன்ஜி மற்றும் டாடா ஏஸ் ஹெச்டி+ ஆகிய மாடல்களுடன் மேம்பட்ட ஏஸ் டீசல் டிரக் ஆகியவை வெளியிட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதுடன் கனெக்ட்டிவிட்டி வசதிகள், கேமரா உதவியுடன் பார்க்கிங் வசதி, HVAC வசதி, என்ஜின் பிரேக் உடன் ஆட்டோமேட்டிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல் உள்ள டாடா பிரைமா 2830.TK VX டிப்பர் டிரக்கினை விநியோகம் செய்ய துவங்கியுள்ளது.

Exit mobile version