Home Truck

டாடா அல்ட்ரா T.7 லாரி விற்பனைக்கு வெளியானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அல்ட்ரா T.7 லாரி மாடல் நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு 4 டயர் அல்லது 6 டயர் என இருவிதமான பிரிவில் 7 டன் சுமை தாங்கும் திறனுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

மிகவும் ஸ்டைலிஷான இலகுரக டிரக் மாடலாக வந்துள்ள அல்ட்ரா வரிசையில் முன்பாக T.10 அல்டரா, T.11 அல்ட்ரா, T.12 அல்ட்ரா ஆகியவை விற்பனைக்கு கிடைக்கும் நிலையில் குறைந்த விலையில் இலகுரக டிரக் மாடலாக டி.7 வந்துள்ளது.

டாடா அல்ட்ரா T.7 லாரி

மிகவும் உயர் தரமான கேபின் அனுபவத்தை கொண்டுள்ள அல்ட்ரா டிரக்கில் 4SPCR நவீனத்துவமான இன்ஜின் பொருத்தபட்டு அதிகபட்சமாக 100 ஹெச்பி பவர் மற்றும் 1,200 – 2,200rpm-ல் 300 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது.  மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இன்ஜின், சிறப்பான சுமை தாங்கும் திறன் பெற்ற சேஸ் கொடுக்கப்பட்டு அதிகப்படியான லாபத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் வெளிவந்துள்ளது.

அல்ட்ரா டி .7, இ-காமர்ஸ் தயாரிப்புகள், எஃப்எம்சிஜி, தொழில்துறை தயாரிப்புகள், நுகர்வோர் பொருட்கள், மின்னணுவியல், அத்தியாவசிய பொருட்கள், எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் விவசாய பயன்பாடுகளுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு இணையாக கேபின் பெற்றுள்ள இந்த லாரியில் ஓட்டுநர் இருக்கை அட்ஜெஸ்ட்மென்ட், டில்ட் மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டீயரிங், டேஸ்போர்டில் கியர் ஷிஃப்ட் லிவர், USB ஃபாஸ்ட் சார்ஜிங், மியூசிக் சிஸ்டம், கனெக்டிவ் நுட்பம் பெற்ற ஃபிளிட் சிஸ்டம் மற்றும் குறைந்த அதிர்வுகள் இறைச்சலை வெளிப்படுத்தும் கேபின் வழங்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் I & LCV பிரிவுக்கு 3 ஆண்டுகள் அல்லது 3 லட்சம் கிலோமீட்டர் உத்தரவாதத்துடன் வருகிறது. மேலும், இது சம்பூர்ணா சேவா 2.0 மற்றும் டாடா சமர்த் – வணிக வாகன ஓட்டுநர் நலன், நேர உத்தரவாதம், ஆன் சைட் சர்வீஸ் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வருடாந்திர பராமரிப்பு மற்றும் ஃபிளிட் மேலாண்மை தீர்வுகள் ஆகியவற்றை வழங்குகிறது.

Exit mobile version