2024 இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் அறிமுகம் 

சர்வதேச அளவில் 350 யூனிட்டுகள் மட்டுமே கிடைக்க உள்ள இந்தியன் ரோட்மாஸ்டர்  எலைட்டின் விலை $41,999 ( Rs 34.85 lakh) 

இந்த மாடலில் தண்டர் ஸ்ட்ரோம் 116 V-ட்வீன் 1890cc ஏர்கூல்டு என்ஜின் பவர் 84.78hp, 170Nm டார்க் உள்ளது. 

12 ஸ்பீக்கர்கள், சேடில்பேக் மற்றும் டாப் பாக்ஸ் 136 லிட்டர் ஸ்டோரேஜ், இருக்கையை ஹீட் மற்றும் கூலிங் செய்யலாம்.

7 அங்குல டிஎஃப்டி கிளஸ்ட்டரில் ஆப்பிள் கார் பிளே ஆதரவு, டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உள்ளது.

முழுமையான எல்இடி லைட்டிங் பெற்றுள்ள இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் பைக்கில் சிவப்பு மற்றும் கருப்பு நிற கலவையை பெற்று கூடுதலாக பாடி கிராபிக்ஸ் உள்ளது. 

416 கிலோ எடை கொண்டுள்ள இந்த பைக் இந்திய சந்தையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்தியன் ரோட்மாஸ்டர் எலைட் மாடலில் 10 ஸ்போக் பெற்ற டைமண்ட் கட் அலாய் வீல், ஸ்டைலிஷான கிராபிக்ஸ் உட்பட பிரத்தியேகமாக சேர்க்கப்பட்ட நிறங்கள் இந்த பைக்கிற்கு கூடுதல் கவர்ச்சியை வழங்குகின்றது.