உலகின் அதிவேக விமானங்கள் – டாப் 10

உலகின் அதிவேக முதல் 10 விமானங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் . அதிவேக விமானங்கள் மற்றும் ஸ்பேஸ் ராக்கெட் மற்றும் கான்செப்ட் மாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

உலகின் அதிவேகமான டாப் 10 விமானங்களில் மனிதர்கள் பயணித்து நிரூபிக்கப்பட்ட X-15  விமானத்திற்க்குதான் உலகின் அதிவேக விமானம் என்ற பெயரை அதிகார்வப்பூர்வமாக கொண்டுள்ளது.

#10 மிக் -31 ஃபாக்ஸ்ஹவுண்ட்

உலகின் அதிவேகமான விமானத்தில் பத்தாமிடத்திலுள்ள மிக் -31 ஃபாக்ஸ்ஹவுண்ட் ( Mikoyan MiG-31 Foxhound )போர் விமானத்தில் இருவர் மட்டுமே பயணிக்க கூடிய முதல் விமானமாக 1975ம் ஆண்டு ரஷ்யா போர் படை விமானமாகும். தற்பொழுதும் ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் போர் படைகளில் பணியாற்றி வருகின்றது.
பறக்கும் வேகம் ; மணிக்கு 2993 கிமீ
விலை ; $57,000,000
உலகத்தை சுற்றி வர எடுத்தக்கொள்ளும் நேரம் – 13.36 மணி நேரம்

#9 XB-70 வல்கியார்

9வது இடத்திலுள்ள XB-70 வல்கியார் (XB-70 Valkyrie) அமெரிக்க போர் படையில் பணியாற்றிய இந்த விமானம் 1964 ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாகும். தற்பொழுது காட்சிக்காக அமெரிக்க தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் வேகம் ; மணிக்கு 3218 கிமீ
விலை ; $750,000,000
உலகத்தை சுற்றி வர எடுத்தக்கொள்ளும் நேரம் – 12.43 மணி நேரம்
XB-70 வல்கியார்

#8 பெல் X-2 ஸ்டார்பஸ்டர்

பெல் , அமெரிக்கா ராணுவம் மற்றும் நாசா என்ற மூவர் கூட்டணியில் உருவாகிய பெல் X-2 ஸ்டார்பஸ்டர் ( Bell X-2 Starbuster ) விமானம் 1955ம் ஆண்டு முதல் பயணத்தினை தொடங்கியது. குறைவான நேரத்தில் அதிவேகத்தினை எட்டும் இந்த விமானம் விபத்தில் சிக்கியது . மொத்தம் 20 தயாரிக்கப்பட்டது.  விபத்தின் காரணமாக இந்த புராஜெக்ட் கைவிடப்பட்டது
பறக்கும் வேகம் ; மணிக்கு 3369 கிமீ
விலை ; $64,000,000

உலகத்தை சுற்றி வர எடுத்தக்கொள்ளும் நேரம் – 11.87 மணி நேரம்

#7 மிக் 25 ஃபாக்ஸ்பேட்

ரஷ்யாவின் மிக் 25 ஃபாக்ஸ்பேட் ( Mikoyan-Gurevich MiG-25 Foxbat ) விமானம் மிக சிறப்பான வேகம் மற்றும் உளவு பார்க்க ஏற்ற போர் விமானமாகும். 1964ம் ஆண்டில் முதல் விமானம் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்நது 1970ம் ஆண்டு முதல் ரஷ்ய படையில் உள்ள இந்த விமானம் பல நாடுகளின் படையில் உள்ளது.
பறக்கும் வேகம் ; மணிக்கு 3524 கிமீ
விலை ; $18,000,000

உலகத்தை சுற்றி வர எடுத்தக்கொள்ளும் நேரம் – 11.35 மணி நேரம்

#6 SR-17 பிளாக்பேர்ட்

1964 முதல் 1998 வரை அமெரிக்க போர் விமானமாக செயல்பட்ட SR-17 பிளாக்பேர்ட் விமானத்தில் இரண்டு என்ஜின் மற்றும் இரண்டு நபர்கள் பயணிக்கலாம். உளவு மற்றும் பறந்த வரும் ஏவுகனைகளை கண்டறிந்து தகர்க்க இயலும்.
பறக்கும் வேகம் ; மணிக்கு 4023 கிமீ
விலை ; $43,000,000

உலகத்தை சுற்றி வர எடுத்தக்கொள்ளும் நேரம் – 9.09 மணி நேரம்

#5 X-15

உலகின் அதிவேக விமானம் என்ற பெயரினை அதிகார்வப்பூரவமாக பெற்றுள்ள X-15 போர் விமானம் அமெரிக்க விமான படையில் 1970ம் ஆண்டு வரை செய்ல்பட்டது. இந்த விமானத்தின் சோதனை ஓட்ட பைலட்டாக நிலவில் முதலடியை பதித்த நீல் ஆம்ஸ்டாராங் செயல்பட்டார்.
பறக்கும் வேகம் ; மணிக்கு 7274 கிமீ
விலை ; $1 ,500,000,000

உலகத்தை சுற்றி வர எடுத்தக்கொள்ளும் நேரம் – 5.5 மணி நேரம்

#4 போயிங் X-51

தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள போயிங் X- 51 அமெரிக்க விமானபடைக்காக தயாரிக்கப்பட்டு வருகின்றது. 2020ம் ஆண்டில் பயன்பாட்டிற்க்கு வரக்கூடும்
பறக்கும் வேகம் ; மணிக்கு 7000 கிமீ க்கு மேல் இருக்கலாம்
விலை ; புராஜெக்ட்
உலகத்தை சுற்றி வர எடுத்தக்கொள்ளும் நேரம் – 6 மணி நேரமாக இருக்கலாம்

#3 நாசா X-43A ஸ்கிராம்ஜெட்

ஹைப்பர்சோனிக் நுட்பத்தில் உருவாகும் நாசா X-43A ஸ்கிராம்ஜெட்  விமானம் ஆகும்
பறக்கும் வேகம் ; மணிக்கு 12,070 கிமீ க்கு மேல் இருக்கலாம்
விலை ; புராஜெக்ட்

உலகத்தை சுற்றி வர எடுத்தக்கொள்ளும் நேரம் – 3.30 மணி நேரம்

[nextpage title=”Next Page”]

# 2 X-41

ஹைப்பர்சோனிக் நுட்பத்தில் உருவாகும் எகஸ்41  விமானம் ஆகும்
பறக்கும் வேகம் ; மணிக்கு 20, 291 கிமீ க்கு மேல் இருக்கலாம்
விலை ; புராஜெக்ட்

உலகத்தை சுற்றி வர எடுத்தக்கொள்ளும் நேரம் – 2 மணி நேரம்

#1 நாசா ஸ்பேஸ்ஜெட்

உலகின் அதிவேக ஸ்பேஸ்கிராஃப்ட் என்றால் நாசா ஸ்பேஸ்ஜெட் ராக்கெட் ஆகும்.
பறக்கும் வேகம் ; மணிக்கு 28164 கிமீ
விலை ; $450,000,000
உலகத்தை சுற்றி வர எடுத்தக்கொள்ளும் நேரம் – 1.4 மணி நேரம்
Word’s fastest  top 10 Airplanes
Exit mobile version