டொயோட்டா ப்யூவல் செல் கார் தொழில்நுட்பம் இலவசம்

டொயோட்டா கார்  நிறுவனம் ப்யூவல் செல் கார் தொழில்நுட்பத்தினை காப்புரிமைகளை அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இலவசமாக தந்துள்ளது.
Toyota Mirai fuel cell car

ப்யூவல் செல் நுட்பம்

ப்யூவல் செல் என்றால் என்ன அதாவது ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் என இரண்டையும் இணைத்து வேதியியல் முறையில் தண்ணீராக மாற்றும்பொழுது கிடைக்கும் மின்சாரத்தினை எரிபொருக்கு மாற்றாக பயன்படுத்தி வாகனத்தினை இயக்ககூடிய நுட்பமே எரிமக்கலன் நுட்பமாகும் அதாவது ப்யூல் செல் அல்லது ஹைட்ரஜன் கார் ஆகும்.

டொயோட்டா எரிமக்கலன் நுட்பம்

டொயோட்டா எரிமக்கலன் நுட்பத்தில் முன்னோடியாக விளங்கி வருகின்றது. ப்யூவல் செல் நுட்பத்தின் மூலம் இயங்கும் மிராய் என்ற காரினை அறிமுகம் செய்துள்ளது.

ஹைட்ரஜன் கார் நுட்ப காப்புரிமை

ஹைட்ஜன் மூலம் இயங்கும் கார்களுக்கும் மொத்தம் 5680 காப்புரிமைகள் பெற்றுள்ளது. இவற்றில் 3350 நுட்பங்கள் எரிமக்கலன் அமைப்புக்கான மென்பொருளுக்கானது. 1970 காப்புரிமைகள் ப்யூவல் செல் அமைப்பு பற்றியதாகும். ஹைட்ரஜன் எரிபொருள் கலனுக்கு 290 மற்றும் ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் சப்பளைக்கு டொயோட்டா பெற்றுள்ளது.

அனைத்து காப்புரிமைகளையும் இலவசமாக பகிர்ந்துகொள்ள டொயோட்டா விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாப் கார்டர் (விற்பனை பிரிவு தலைவர் அமெரிக்கா) கூறியுள்ள விவரங்கள்

ஹைட்ரஜன் கார் நுட்பத்தில் முதல் தலைமுறை கார்கள் அதிகமாக விற்பனைக்கு வரவேண்டும் மேலும் புதிய நுட்பங்களை மேலும் அதிகரிக்கும் நோக்கில் வரும் 2020 வரை இந்நுட்பத்தினை இலவசமாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Toyota shares free use of fuel cell car patents

Exit mobile version