Site icon Automobile Tamilan

ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் அறிமுகம்

இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் அமியோ செடான் கார் பல சிறப்பம்சங்களுடன் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் அமியோ கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

போலோ ஹேட்ச்பேக் காரை அடிப்படையாக கொண்டா அமியோ செடான் கார் 4 மீட்டருக்கள் அமைந்துள்ளது. பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பை , ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இனைக்கப்பட்டுள்ளது. வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு வருகின்றது.

73Bhp ஆற்றலை வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 89Bhp ஆற்றலை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் போன்றவற்றை பெற்றுள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக DSG ஆட்டோ கியர்பாக்சினை கூடுதலாக பெற்றுள்ளது.

Exit mobile version