Automobile Tamil

செவர்லே கேமரோ , கொர்வெட் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது

ஜிம் செவர்லே நிறுவனத்தின் கேமரோ மற்றும் கொர்வெட்  ஸ்போர்ட்ஸ் கார்கள் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வந்துள்ளது. ஆனால் இந்தியாவில் கேமரோ மற்றும் கொர்வெட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய வாய்ப்பில்லை.

2016-Chevrolet-Corvette

2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள செவர்லே கேமரோ கடந்த வருடத்தில் நடைபெற்ற டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வந்தது.  6வது தலைமுறை கேமரோ மாடலில் 3 விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் உள்ளது.

275hp ஆற்றல் மற்றும் 400Nm டார்க் வழங்கும் 2.0 லிட்டர் LTG டர்போசார்ஜ்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர் இதன் 0 – 97 கிமீ வேகத்தை எட்ட 6 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

335hp ஆற்றல் மற்றும் 385Nm டார்க் வழங்கும் 3.6 லிட்டர் வி6  LGX டர்போசார்ஜ்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மெனுவல் மற்றும் 8 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது.

டாப் வேரியண்டில் கொர்வெட் ஸ்டிங்கிரே 6.2 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 455HP மற்றும் டார்க் 617Nm பெற்றுள்ளது. இதில் இதில் 7 வேக மெனுவல் மற்றும் 8 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. இதன் 0 – 97 கிமீ வேகத்தை எட்ட 4 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

செவர்லே கொர்வெட்

மற்றொரு ஸ்போர்டிவ் கார் மாடலான கொர்வெட் காரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வந்துள்ளது. இதில் 6.2 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 455HP மற்றும் டார்க் 617Nm பெற்றுள்ளது. இதில் இதில் 7 வேக மெனுவல் மற்றும் 8 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. இதன் 0 – 97 கிமீ வேகத்தை எட்ட 4 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

வெதர் , இக்கோ , டூர் , ஸ்போர்ட்ஸ் மற்றும் ட்ராக் என 5 விதமான டிரைவிங் மோடினை பெற்றுள்ள கொர்வெட் 8 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , வலுமிக்க இலகு எடை கார்பன் ஃபைபர் பாடி என பல நவீன அம்சங்களை பெற்றுள்ளது.

மேலும் இந்த இரு மாடல்களுமே இடப்பக்க ஸ்டீயரிங் வீலை மட்டுமே பெற்றுள்ளது. இந்திய வருமா என்பதற்கு உறுதியான தகவல் இல்லை. ஃபோர்டு மஸ்டாங் கேமரோ போட்டியாளரும் காட்சிக்கு வந்துள்ளது. மஸ்டாங் இந்திய வருகை உறுதியாகியுள்ளது.

[envira-gallery id="7131"]

 

Exit mobile version