ஜீப் கிராண்ட் செரோக்கீ SRT அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

இந்திய சந்தையில் ஜீப் பிராண்டு விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ள நிலையில் ஜீப் கிராண்ட் செரோக்கீ SRT பெர்ஃபாமென்ஸ் எஸ்யூவி கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி மாடலின் பெர்ஃபாமென்ஸ் ரக மாடலாக விளங்கும் கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி மாடலில் 461 bhp ஆற்றலை வழங்கும் 6.4 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 624Nm ஆகும். இதில் 4 வீல்களுக்கும் ஆற்றலை எடுத்து செல்லும் குவாட்ரா ட்ராக் ஏக்டிவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளது. இதில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.  இந்த என்ஜினில் ஈக்கோ மோட் வாயிலாக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை பெற இயலும்.

0 முதல் 100 கிமீ வேகத்தினை 5 விநாடிகளில் எட்டும் . கிராண்ட் செரோக்கீ எஸ்ஆர்டி உச்ச வேகம் மணிக்கு 257 கிமீ ஆகும்.

கிராண்ட் செரோக்கீ மாடலில் வித்தியாசப்படுத்தும் வகையில் தோற்ற மாற்றங்களை பெற்றுள்ள எஸ்ஆர்டி மாடல் மிகவும் ஸ்டைலான கம்பீரத்தினை பெற்றுள்ளது. முகப்பில் பை-ஸெனான் அடாப்டிவ் முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , 20 இஞ்ச் க்ரோம் அலாய் வீல் இரு ஆப்ஷன்களில் , மிக அகலமாக 7.4 இஞ்ச் இன்ஸ்டூருமெண்ட் கன்சோல் , 8.4 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் , ஸ்போர்ட்டிவ் நாப்பா லெதர் இருக்கைகள் போன்றவற்றுடன் பல நவீன அம்சங்களை பெற்றுள்ளது.

இந்த வருடத்தின் மத்தியில் கிராண்ட் செரோக்கீ SRT இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகின்றது. இது தவிர கிராண்ட் செரோக்கீ , ரேங்கலர் எஸ்யூவி போன்றவை இந்த வருடத்தில் விற்பனைக்கு வரும்.

Exit mobile version