டிவிஎஸ் அகுலா 310 பைக் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

சுறா மீன்  வடிவ தாத்பரியத்தில் டிவிஎஸ் அகுலா 310 ரேஸர் பைக் கான்செப்ட் மாடலை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. ஃபுல் பேரிங் செய்யப்பட்ட டிவிஎஸ் அகுலா 310 பைக்கில் 300சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

TVS-Akula-310-concept

அகுலா என்பது ரஷ்ய மொழி இதன் பொருள் சுறா ஆகும். 33 வருடமாக ரேசிங் துறையில் பங்காற்றி வரும் டிவிஎஸ் ரேசிங் பிரிவின் டிசைன் வடிவ தாத்பரியங்களுடன் மிக நேர்த்தியாக முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலாக காட்சியளிக்கும் அகுலா 310 கான்செப்ட் பைக் டெயில் பகுதி மற்றும் முகப்பு தோற்றம் சிறப்பாக உள்ளது.

இலகு எடை அதிக வலுமிக்க கார்பன் ஃபைபரால் கட்டமைக்கப்பட்டுள்ள டேங்க் மற்றும் பாடி பேனல்கள் சிறப்பாக உள்ளன. இதில் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 300 சிசி என்ஜினில் ஆற்றல் அதிகரிக்கப்பட்டு அதே என்ஜினை ரேசிங் திறனுடன் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

130 கிலோ எடை கொண்ட மாடலாக விளங்க போகும் டிவிஎஸ் அகுலா 310 பைக்கில் முன்பக்கத்தில் யூஎஸ்டி ஃபோர்க்குகள் , பின்புறத்தில் ரேஸ் சஸ்பென்ஷன் , ரேடியல் காலிப்பர் , ஹை ஸ்டீஃப் ஸ்பேஸ் ஃபிரேம் சேஸீ , டிஜிட்டல் கன்சோல் , ஹீட் மேனேஜ்மென்ட் அமைப்பு , ஆன் போர்டு gyro கேமரா , ஸ்டீயரிங் டேம்பர் போன்றவற்றை பெற்றிருக்கும்.

[envira-gallery id="7125"]

Exit mobile version