
இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் தனது கார்களுக்கு டிசம்பர் 5,6 மற்றும் 7 என மூன்று நாட்களுக்கு மட்டுமே சிறப்பு விற்பனையை நடத்துகிறது. இந்த நாட்களில் ஷோரூம்கள் நள்ளிரவு வரை திறந்திருக்கும்.
இந்த மிட்நைட் கார்னிவலின் சிறப்பம்சங்கள் கார் வாங்குபவர்களுக்கு லண்டன் செல்லும் வாய்ப்பு உட்பட ஒட்டுமொத்தமாக ₹11 கோடி மதிப்பிலான பரிசுகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கார் முன்பதிவுக்கும் சிறப்பு ‘Holiday Voucher’ மற்றும் ‘Scratch and Win’ சலுகைகள் வழங்கப்படுவதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மாடல் வாரியான சலுகைகள் விபரம் பின் வருமாறு;-
அதிகபட்சமாக ₹4 லட்சம் வரை சலுகைகள் எம்ஜி மோட்டாரின் குளோஸ்டெர் எஸ்யூவிக்கு இதன் ஆரம்ப விலை ₹38.33 லட்சம் ஆகும்.
எம்ஜி ZS EV மாடலுக்கு சுமார் ₹1.25 லட்சம் வரை சலுகைகளுடன் BaaS (Battery-as-a-Service) திட்டத்தில் இதன் விலை ₹13.99 லட்சத்தில் தொடங்குகிறது.
அடுத்து இந்நிறுவன ஹெக்டருக்கு ₹90,000 வரை சலுகைகள் வழங்கப்பட்டு ஆரம்ப விலை ₹14 லட்சத்தில் துவங்குவதுடன், குட்டி எலக்ட்ரிக் காரான காமெட் இவிக்கு ₹1 லட்சம் வரை சலுகை வழங்கப்படுவதுடன் BaaS விலை ₹4.99 லட்சம் ஆகும்.
இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற விண்ட்சர் EV காருக்கு புதிதாக வந்த இந்த காரில் ₹50,000 வரை சலுகை வழங்ப்படுவதுடன் கூடுதலாக ₹50,000 வரை ஆஸ்டருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
