
இந்தியாவின் முன்னணி மின்சார கார் தயாரிப்பாளராக விளங்கும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாரின் பிரசத்தி பெற்ற வின்ட்சர்.EV மாடலுக்கு தொடர்ந்து அமோக ஆதரவினை பெற்று வரும் நிலையில் விற்பனைக்கு வந்த 400 நாட்களுக்குள் 50,000 யூனிட்டுகளை கடந்து ஒவ்வொரு மணி நேரத்துக்கு 5 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக எம்ஜி குறிப்பிட்டுள்ளது.
வின்ட்சர்.இவி காரில் 38kwh மற்றும் 52.9kWh என இரு விதமான பேட்டரியை பெற்று முறைய 331 கிமீ மற்றும் 449கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடல்கள் சிறப்பான இடவசதி, சிறந்த ரேஞ்சு மற்றும் சொகுசான பயணம் போன்ற காரணத்துடன் பட்ஜெட்டில் கிடைக்கும் BAAS திட்டம் போன்றவை சிறப்பான வரவேற்பினை பெற முக்கிய காரணங்களாகும்.
அக்டோபர் 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட வின்ட்சர் அதிக கவனத்தை ஈர்த்து முதல் ஆண்டில் 40,000 யூனிட்டுகளை கடந்த நிலையில் இன்ஸ்பையர் எடிசன் வெளியான நிலையில், MGயின் பேட்டரி-ஆஸ்-ஏ-சர்வீஸ் (BaaS) திட்டம், வாங்குபவர்கள் பேட்டரியை தனித்தனியாக சந்தா செலுத்துவதன் மூலம் ஆரம்ப கொள்முதல் விலையைக் குறைக்க அனுமதிக்கிறது, மேலும் வின்ட்சர் EV தொடர்ந்து இந்நிறுவன மாதாந்திர விற்பனையில் ஒரு பெரிய பகுதியைப் பதிவு செய்துள்ளது.