Automobile Tamilan

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

புத்தம் புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 வருடங்களாக நெ.1 எம்பிவி காராக டொயோட்டா இன்னோவா திகழ்கின்றது.

toyota-innova-crysta-expo-2016

முந்தைய இன்னோவா எம்பிவி காரின் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட மாடலான இன்னோவா க்ரிஸ்டா காரில் புதிய என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் மேலும் கூடுதலாக மெனுவல் தவிர 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்றவற்றை பெற்றுள்ளது.

புதிய இன்னோவா காரின் நீளம் 4735மிமீ அகலம் 1830மிமீ மற்றும் உயரம் 1795மிமீ ஆகும் . இது தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட 180மிமீ நீளம் , 60மிமீ உயரம் மற்றும் 45மிமீ அகலம் போன்றவை கூடுதலாகும். ஆனால் வீல்பேஸ் 2750மிமீ சமமாக உள்ளது.

இன்னோவா க்ரிஸ்டா காரில் 147 பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

மேலும் பாதுகாப்பு பொருத்தமட்டில் டோயோட்டா எவ்விதமான சமரசத்தையும் செய்து கொள்ளாது என்பதற்கேற்ப இன்னோவா க்ரிஸ்டா காரில் அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகளை பெற்றிருக்கும். ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவை நிரந்தர அம்சமாக இருக்கும். டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகளை பெற்றிருக்கும்.

ரூ.25 லட்சம் விலையை டாப் வேரியண்ட் எட்டலாம் என தெரிகின்றது. இந்த ஆண்டின் மத்தியில் இன்னோவா விற்பனைக்கு வரவுள்ளது. டீசல் தவிர பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடலும் வரலாம். முந்தையா இன்னோவா காரினை பெயரை வித்தியாசப்படுத்த க்ரீஸ்டா என்பதனை கூடுதலாக இணைத்துள்ளது.

Exit mobile version